குமரன்

ஊடகவியலாளர் அடையாள அட்டை விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு

ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல் திணைக்களத்தின் அனுமதியுடனே அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரை தலையிடச் செய்வது என்பது பெரும் அச்சுறுத்தல் மாத்திரமின்றி அடக்குமுறை முயற்சி எனவும் எச்சரித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ...

Read More »

ஒன்றுபட்டுப் போராடினால் எதையும் மாற்ற முடியும்! கனடாவில் தமிழ் மக்கள் ……

மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை நிரூபித்துள்ளனர் 253 பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டு 155,000 க்கும் மேற்பட்ட (தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ) மாணவர்களைக் கொண்ட கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்திய பாடசாலைக் கல்விச் சபை, இவ்வாண்டு மே 18, 2020இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் “இன்று தமிழர் இனப்படுகொலை நினைவு நாள்” என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்து வெளியிட்ட கீச்சக செய்திக்கு தமிழ்மக்கள் நன்றியையும் சிறிலங்கா ...

Read More »

அடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு: ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மந்திரி

அடுத்த ஆண்டு வரைக்கும் ஆஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட வாய்ப்பு என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளை கண்காணிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், ...

Read More »

யாழில் வாள் வெட்டு: இருவர் காயம்!

யாழ். வடமராட்சி – புலோலி காந்தியூர் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சண்டையில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், வர்த்தக நிலையம் ஒன்று ரவுடிகளால் உடைக்கப்பட்டது. நேற்று (17) இரவு 7.30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்தச்சம்பவத்தில் சிவபுண்ணியம் தேவராஜ் (வயது- 22), புவனேஸ்வரன் குகராஜ் (வயது- 19) ஆகிய இருவரும் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் நேற்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றும் அடித்து ...

Read More »

தலைநகர் சென்னை… மண்ணை மிதித்தவனை கைவிடாது

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் விவேக், இந்த மண்ணை மிதித்தவனை சென்னை கைவிடாது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19-ந் தேதி ...

Read More »

ஈழப் போரின் தாக்கம் சிட்னியில் வாழும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு: கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடிய இனவழிப்பின் நினைவு நாள் தொடர்பான எனது உரை தொடர்பாக கடுமையான மிகவும் அதிர்ச்சியாக இருக்ககூடிய செய்தி என்னவென்றால், இந்த கொடுமையான அச்சுறுத்தல்கள் அனைத்தும் ...

Read More »

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் ஈழப்பெண்

ஈழத் தீவில் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார். இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியுள்ளது. ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார். வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் ...

Read More »

வெடிபொருள் நிரப்பிய பொம்மை! பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை!

யாழ்ப்பாணம், வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் காவல் துறை  ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்   பருத்தித்துறை வீதியில் வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக பொம்மை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. அந்தப் பொம்மையை ஆராய்ந்த போது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் ...

Read More »

சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா

 பீஜிங்கில் கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய நிலையில் அங்கு 90 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை.  அது பாதுகாக்கப்பட்ட நகரமாகவே, அரணாக அனைவருக்கும் தோன்றியது. சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு ...

Read More »

யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள்?

வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்பு எந்தனை விதவைகள் இருக்கின்றார்கள் என மக்கள் ஆணை பெற்றவர்கள்தான் சரியான தரவுகளை கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். விதவைகள் 87 ஆயிரம் பேர் இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என உமாச்சந்திரா பிரகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம்(16) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ...

Read More »