குமரன்

தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கு சமன் பந்துலசேனவுக்கு பரிசு

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ ஜெனகவேவ கிராம பிரிவைச் சேர்ந்த 1417 சிங்களக் குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தைக் குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வேலையாட்களின் குறைபட்ச வேதன திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் ...

Read More »

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிககைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு ...

Read More »

வடக்கு மீனவர்களின் அழிவை அரசாங்கம் வேடிக்கை பார்கின்றது

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி எமது கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் திட்டமிட்டே வடக்கின் அழிவுகளை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தினார். அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்கள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் உடனடியாக சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக ...

Read More »

ஈழத்தமிழர் மெல்பனில் உணவு தவிர்ப்பு போராட்டம்

சங்கர் கணேஷ் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது  

Read More »

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது

இலங்கை இந்திய உடன்படிக்கை இலங்கை இந்திய உடன்படிக்கை என்னும் அனைத்துலக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 34ஆவது ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இலங்கை தனது தேசிய நெருக்கடிகளின் பொழுது இந்தியாவிடம் முதலில் உதவி கோரியதன் பின்னரே அது அனைத்துலக நாடுகளிடம் உதவி கோரலாம் என்பதை வலியுறுத்தியே இந்த உடன்படிக்கை அந்நேரத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது. 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் ...

Read More »

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்

அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும் என மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.12 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ஆகலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் அந்தோணி பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ...

Read More »

உடல்நிலை குறித்து நடிகர் மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நடிகர் மம்முட்டி, தற்போது மலையாளத்தில் தனது மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் ‘புழு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் ...

Read More »

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு அனுமதி

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்தார். இதனால் இந்த வருட ஆலய உற்சவத்தினை சிறப்பாக நட த்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More »

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள கிளிநொச்சி காவல் துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலத்திற்கு உரியவர் போர் காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Read More »

குயின்ஸ்லாந்தில் 16 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 199 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 199 பேரில் 88 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 111 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 50 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் ...

Read More »