கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள கிளிநொச்சி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலத்திற்கு உரியவர் போர் காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal