அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும் என மூத்த மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.12 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ஆகலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் அந்தோணி பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும். மேலும் குளிர் காலத்தில் டெல்டா வகை மாறுபாட்டைவிட வீரியம் மிக்க புதிய மாறுபாடு ஏற்படலாம்.
இதனால் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.