குமரன்

ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் ...

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த தயங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்தில் அரசதரப்பையும் எதிர்கட்சிகளையும் சேர்ந்த 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ள நிலையில் கொரேனாh வைரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் மேலும் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்;டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிசிஆர் சோதனை விடயத்தில் அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதளவும் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

Read More »

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம்?

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப் பதற்கான காரணத்தை பொது சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைக்குள் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது கொழும்பு மாவட்டம் முழுவதும் பரவி காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி 24 ஆம் திகதி அன்று வெளியான கொரோனா அறிக்கையை ஆய்வு செய்யும் போது இந்த நிலைமை தெளிவாகிறது என வைத்தியர் ஹரித அலுத்கே ...

Read More »

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம் !

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரத்தைப் போட்டுத் தந்துள்ளது. அந்த அத்திவாரம் இன்றும் அப்படியே உள்ளது. அந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி எமக்கான தனித்துவமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குத் திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இளங்கலைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஈழத்திரைச் ...

Read More »

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து பிரிட்டன் கவலை

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் பிரிட்டன் தனது கரிசனைகளை தெரிவித்துள்ளது என இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அடுத்தவாரம் வெளியாகவுள்ள ஐநாவின் அறிக்கையில் இது குறித்து ஐநா மனித உரிமை பேரவைக்கான விபரங்கள் அடங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More »

தீவகத்தில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்

தீவகத்தில் கடற்படையினர் கடந்த 30 வருடகாலமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவிக்கவேண்டும் என கோரி இன்று வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Read More »

பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர்  ஜெயஸ்ரீ  ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. ...

Read More »

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது தான்அதன் வகைகளை அடையாளம் காண முடியும். எனவே மரபணு ரீதியிலான சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் ...

Read More »

இந்த ஆண்டு திருமணமா? – சுருதிஹாசன் விளக்கம்

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் ...

Read More »

ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய போரிஸ் ஜோன்சன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் நேற்றைய தினம் தொலைபேசியில் உரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்பு ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜோன்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோ பைடனுடன் பேசிய பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ஜோ பைடனுடன் ...

Read More »