ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய போரிஸ் ஜோன்சன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் நேற்றைய தினம் தொலைபேசியில் உரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற பின்பு ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜோன்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனுடன் பேசிய பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள தனித்துவமான நட்பை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்தை போரிஸ் ஜோன்சன் வரவேற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.