குமரன்

கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா குடும்பம்!

மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் home to Bilo குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி பலி!

அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக Monash பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கமராவின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பில் காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து ...

Read More »

தொடாவிடினும் சுடும் அமேசன் தீ !

இந்தப் பூமி  தனி ஒருவருக்கு  சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம்  மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற  உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட  கொடூரமான பெருவிலங்குகள்  இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் ...

Read More »

இந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தை நோக்கி நகர்கின்றன!

இந்தியாவும் பாக்கிஸ்தானும் நேரடியான யுத்தமொன்றை நோக்கி செல்கின்றன என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நியுயோர்க் டைம்சில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் விவகாரத்தில் சர்வதேசசமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலகம் எடுக்காவிட்டால் முழு உலகிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என எழுதியுள்ள இம்ரான்கான் இரு அணுவாயுத நாடுகளும் நேரடி மோதலை நோக்கி நகர்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணலாம் என ...

Read More »

பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு!

பருத்தித்துறை பகுதியல் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர். யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த கால யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே!

அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியா ஓமந்தையில் நேற்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன உறவுகள் தங்களுக்கு ஒரு நீதி வேண்டி ஒரு போராட்டத்தை  நடத்தியிருக்கிறார்கள். ...

Read More »

மொழி மாறினாலும் நடிப்பு மாறாது – பட்டாஸ் நடிகை

மொழி மாறினாலும் நடிப்பு மாறாது, தன் காதல் நடிப்பு மீதானது என தனுஷின் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார். ‘அசுரன்’ படத்தை முடித்துவிட்டு, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சில நாட்களுக்கு முன்பு, பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘கொடி’ படத்துக்குப் பிறகு இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்குப் பிறகு ‘பட்டாஸ்’ படத்தில் ...

Read More »

காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.வின் விசேட அறிக்கை!

வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களைப் பொறுத்தவரை இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. அவ்வலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கான தீர்வையும்,  மீட்சியையும் அளிக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியிருக்கிறது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

வெலிக்கடை வழக்கு மூன்று நாட்கள் விசாரிக்கப்படும்!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வெலிக்கடை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்பட்ட மோதலின்போது 27 சிறைக்கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

நியூயார்க்கில் தாக்குதல் நடத்த சதி- ஐஎஸ் ஆதரவாளர் கைது!

அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான செயல்களில் ஒரு வாலிபர் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த வாலிபரின் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறை நேற்று அவரை  கைது செய்தனர். விசாரணையில், 19 வயது நிரம்பிய அந்த வாலிபர், பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களின் ஆதரவாளராக மாறியது  ...

Read More »