குமரன்

ஈழப் பெண் நடிகையை கியூ பிரிவு காவல் துறையினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்!

கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை  சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ...

Read More »

கோத்தா சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவார் என விக்கி நம்புகின்றார்!

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன். பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான ...

Read More »

19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். (இன்று) நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ...

Read More »

10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீனாவில் முகாம்களில் அடைப்பு!

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கசிந்த சீன அரசு ஆவணங்களை வைத்து தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐநா நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கூறும்போது, சீனாவின் மேற்கு சின் ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர், இது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கடும் கண்டனங்களுக்கு ...

Read More »

வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்

நான் இறந்தால் என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதுமா என்பது கேள்வி. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கெளரவம் அத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது… பத்திரிகைகளாவது ஒருநாள் எழுதும்… எழுதாமலும் போகும். ஆனால், நண்பர்கள் என்று சில பிறவிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்துவிட்டால் எனக்கு சாகக்கூட பயமாயிருக்கிறது.’ நையாண்டி பாரதி என்ற புனைபெயரில் ‘கிராம ஊழியன்’ இதழில் 1944-ல் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்று உணர்ந்திருந்தபோதிலும், ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்து மறைய வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டவர் ...

Read More »

அகதிகள் – தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையே கடுமையான மனநல நெருக்கடி!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் பப்பு நியூ கினியாவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பாதிரியார் அங்குள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். “பப்பு நியூ கினியாவில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு இருக்கும் நிலையற்ற சூழல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் சிலரை சந்தித்த பிறகு தான்ன், அவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளுக்குள் வாழ்வதை உணர்ந்து கொண்டேன்,” எனக் கூறியுள்ளார். வின்செண்ட் வான் லாங் என்னும் அப்பாதிரியார் குழந்தையாக இருந்த பொழுது ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சமடைந்தவர். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 பேர் கொண்ட குழுவுடன் ...

Read More »

கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி!

கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விஜய் ...

Read More »

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய நாளை பதவியேற்பு!

சிறிலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார். இந்தப் பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. இதற்காக மக்களை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மக்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து மக்களை அழைத்துச் செல்வதற்கு ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா  மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Read More »

யாழ்.மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி!

யாழ்.மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது. அந்தவகையில் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், பருத்தித்துறை, உடுப்பிட்டி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய தேர்தல் தொகுதிகளில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்றுள்ளார். அதன்படி புதிய ஜனநாய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 312722 வக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதுடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 23261 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலும் சிவாஜிலிங்கம் 6845 வாக்குகளைப் ...

Read More »

சஜித் அமோக வெற்றி! வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு!

வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று முன்னிலையிலுள்ளார். வன்னி மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 174739 வாக்குகளைப்பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 26 105 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளார். வன்னி மாவட்டத்தில் 212778 செல்லுபடியாகும் வாக்குகளும் 216072 அளிக்கப்பட்ட வாக்குகளும் 3294 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Read More »