குமரன்

தேசிய புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்!

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Read More »

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் அலைஸ் வேல்ஸ் அழுத்தம் ….!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார மீள் எழுர்ச்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஜெனிவா தீர்மானத்தில் வெளிமட்ட அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலைஸ் வேல்ஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளது தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தாம் அழுத்தம் கொடுப்பதாக அலைஸ் வேல்ஸ் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார் சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு ...

Read More »

வித்தியாசமான தோற்றத்தில் பார்வதி!

தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமாக இருக்கும் பார்வதியின் வித்தியாசமான தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. நடிகை பார்வதி பொதுவாகவே தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்றாலும் கடந்த ஒரு வருட காலமாகவே அவரை தங்களது படங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க மலையாள திரையுலகம் தயங்கி வருகிறது. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதால் பார்வதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய பலரும் தயங்குகின்றனர், ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் பார்வதி கவலைப்பட்டதாக தெரியவில்லை. தன்னை தேடிவந்து கதை சொன்ன இயக்குனர் வேணுவுக்கு உடனடியாக ...

Read More »

விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டன தகவலை வழங்கியது யார்?

ஜனவரி 8 ம் திகதி ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொள்வதற்கு எட்டு மணித்தியாலத்திற்கு முன்னரே தமக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தாங்கள் படையினரையும் இராணுவ தளபாடங்களையும் பாதுகாப்பான பதுங்கு குழிகளிற்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்கியதாகவும் ; தாக்கப்பட்ட தளங்களை சேர்ந்த இரு ஈராக்கிய படையினர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் தாக்குதல் இடம்பெற்றவேளை வெளியே எந்த போர்விமானமோ அல்லது ஹெலிக்கொப்டரோ இருக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அமெரிக்க படையினருக்கு என்ன நேரத்தில் தாக்குதல் நடக்கும் என்பது கூட தெரிந்திருந்தது என ...

Read More »

காட்டுத்தீ புகையால் காற்று மாசுபாடு: போட்டியின்போது நிலைகுலைந்த டென்னிஸ் வீராங்கனை!

மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை ...

Read More »

ஹரி – மேகன் தம்பதியின் புதிய மாற்றத்திற்கு ராணி அனுமதி!

பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து ஹரி தனது மனைவியும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதற்கு ;மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் இரண்டாவது மகனான ஹரிக்கும் அமெரிக்க நடிகையான மேகனுக்கும் ;2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அரசு குடும்ப நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருந்த ஹரி – மேகன் தம்பதி, பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர். தங்கள் தேவைக்காக பணிக்கு செல்வதாகவும் கூறினர். இது ...

Read More »

பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் ...

Read More »

‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது… அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை ...

Read More »

வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு: மகள் பலி!

வரக்காபொல ;கணேகம ;பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாகவும் காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் தாய் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (14.01.2020) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பெயரிட்டப்பட்டுள்ளது. 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனிநபர்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கட்டது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »