குமரன்

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் நேற்யதினம் (11) காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை நிறப்பெட்டியாக காணப்பட்டதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற காவல் துறை குறித்த பெட்டியினை எடுத்து பார்த்தபோது விடுதலைப்புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சில காணப்பட்டுள்ளன. இதன்போது விடுதலைப்புலிகளின் நான்கு சீருடைகளும் அவற்றுக்கான தொப்பிகளுடன் பெண்போராளிகள் பயன்படுத்தும் இடுப்பு பட்டி மற்றும் சிவில் ...

Read More »

சுமந்திரன் – சமுதித்த சர்ச்சைக்குரிய பேட்டி

சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியே சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி, இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அத்தகைய நிலையில், அப்படி என்னதான் அந்தச் சிங்கள ஊடகத்தில் சுமந்திரன் பேசியிருக்கின்றார் என்ற அவா, எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. அதற்கு விடைதருவதுபோல், அந்தப் பேட்டியின் முழுமையான மொழிபெயர்ப்பை அஜீவன் செய்திருக்கிறார். அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம். சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரைத் தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண ...

Read More »

கொரோனா குறித்து முன்பே கணித்த பில்கேட்ஸ் தகவல்

கொரோனா குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து கூறிய கோடீஸ்வரர் பில் கேட்ஸ், தற்போது அதன் தாக்கத்தை மிகவும் பயங்கரமானது என கூறியிருக்கிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 2.87 லட்சம் மக்கள் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். இன்னும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அதன் வீரியம் குறைந்தபாடில்லை. இப்படி மனித குலத்தையே நாசம் செய்து வரும் இந்த தொற்று நோய் குறித்து, உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவன ...

Read More »

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும்!

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது. கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ...

Read More »

இன்று சர்வதேச செவிலியர்கள் தினம்: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்த ஆண்டு

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான ...

Read More »

47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன. இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன், ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார். இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, ...

Read More »

கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது!

சிறிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிப்பதுடன் வர்த்தகங்களை மீண்டும் செயல்பட வைக்கும் வகையில் அந்நாட்டு அரசின் மூன்று கட்ட திட்டத்தின்படி உணவகங்களையும் திறக்க சிறிய மாநிலங்கள் அனுமதித்தன. கிட்டத்தட்ட 1 மில்லியன் பேர் மீண்டும் வேலைக்குச் செல்ல வழிவகுக்கும் மூன்று கட்ட செயல்முறையை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. தினமும் 20க்கும் குறைவானோருக்கே நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அந்நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது. தலைநகர் கேன்பரா உட்பட சில மாநிலங்களில் நேற்று முதல் ...

Read More »

வாட்ஸ்அப் வெப் தளத்தில் புதிய வசதி

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் சேவையை பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் சாதனங்களில் லாக் இன் செய்ய முடியும். பல்வேறு மாற்றங்களுடன் இந்த அம்சத்தை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் ...

Read More »

இராணுவ மயமாகும் சிறிலங்கா அரச இயந்திரம்!

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த பத்ராணி வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

நான் ஆஜராக முடியாத நிலை! – சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் . நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ;ஜூன் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »