தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் .
நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் ;ஜூன் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் இதுவரை 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன