சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த பத்ராணி வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal