வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி வெளியாகியுள்ள தகவல்களில் வாட்ஸ்அப் சேவையை பல்வேறு சாதனங்களில் லாக் இன் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அம்சம் மூலம் பயனர்கள் சாதனங்களில் லாக் இன் செய்ய முடியும். பல்வேறு மாற்றங்களுடன் இந்த அம்சத்தை வழங்குவதற்கான பணிகளில் அதன் டெவலப்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2019.6 பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் வெளியிடப்படும் முன் சீராக இயங்க வைக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது.
ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தில் பயனர்கள் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பின் இன்வைட் லின்க் மூலம் மற்றவர்களையும் இணைப்பில் சேர்த்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் வெப் தவிர ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களிலும் இந்த அம்சம் வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.