குமரன்

சிவகுமார் செய்யும் ‘செலக்டிவ்’ யோகாக்கள்!

‘தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன்’என மாறா இளமையுடன் திகழ்வதாகப் புகழப்படுபவர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். இந்த 78 வயதில் அவரது ‘இளமையின் ரகசியம்’எதுவெனக் கேட்டதும் இத்தனை காலமாக செய்து வந்த ‘யோகா’என்கிறார். யோகக்கலையில் தனது 16-வது வயதில் தினசரி 38 ஆசனங்களைச் செய்யத் தொடங்கியவர் தற்போது ஒருசில ஆசனங்களை மட்டும் ‘செலக்டிவாக’ செய்வதாகவும் மூச்சுப் பயிற்சிக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். அவரிடம் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூறமுடியுமா என்றதும் ரத்தினச் சுருக்கமாக பதில் வந்தது. மூச்சுக்கு முதன்மை “உடற்பயிற்சிக்கும் யோகப் பயிற்சிக்கும் உள்ள ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக கேபாராடிய கவுன்சிலர் கைது!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் Kangaroo Point ஹோட்டலில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சி கவுன்சிலர் Jonathan Sri கைது செய்யப்பட்டுள்ளார். குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தன்னை கைது செய்ததில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், என்மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என Jonathan Sri குறிப்பிட்டுள்ளார். “நிலைமையை தணிக்க முயலாமல் படைப்பலத்தை மேலும் நிலைமை மோசமடையும் விதத்தில் காவல்துறையினர் பயன்படுத்தினர்,” என அவர் கூறியுள்ளார். கங்காரு ...

Read More »

ரசிகரின் திறமையை புகழ்ந்த கமல்

 தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ரசிகரின் திறமையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இதில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படத்தில் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.  இந்த நிலையில், அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடிகர் அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த வீடியோ கமல்ஹாசனின் ...

Read More »

விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா

கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். 3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவது குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோத்தாபய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் மூவாயிரம் இராணுவத்தை கொன்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று ...

Read More »

உறவுகளைத் தேடி போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்!

முல்லைத்தீவு -வள்ளிபுனம் பகுதியைச்சேர்ந்த தங்கவேல் சத்தியதேவி என்னும் தாயார் கடந்த இறுதியுத்த காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது ஐந்து உறவினர்களைத் தேடிவருகின்றார். இந் நிலையில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது தொடர் போராட்டத்தின் 1200ஆவது நாளான 20.06இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்த குறித்த சத்தியதேவி என்னும் தாயர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவிக்கும்போது கதறிஅழுதபடியே மயங்கிவீழ்ந்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, எனது மருமகன் சின்னத்தம்பி – மகாலிங்கம், மகள் சிவாஜினி, பேரரப்பிள்ளைகளான மகிழினி, தமிழ்ஒளி, ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பெற்றோரின் சடலங்களை நடுக்கடலில் கைவிட்டு நீந்தி கரை சேர்ந்த இளைஞர்

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் ...

Read More »

போலிமனிதர்களை எம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து நீக்குங்கள்- சசிகலா ரவிராஜ்

போலி மனிதர்களை எமது தமிழ்தேசிய அரசியலில் இருந்து நீக்கி எம் இனத்தின் வீரத்தை உரிய நேரத்தில் வெளிக்காட்டுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்தேசிய தலைமையின் பிள்ளைகள் நாம் யாரை ஆதரிக்கவேண்டும்,யாரை நீக்கவேண்டும் என்ற முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனது மனதில் இருந்தவற்றை தெளிவாக தெரிவித்துவிட்டேன்,தமிழ்தேசியம் வெல்வதற்கு நீங்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை நீக்கவேண்டும் என்பதை நீங்கள ஊகித்துவிட்டதை உளமாற உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் களப்பணியை எந்த ஒரு தயக்கமும் இன்றி போலிமனிதர்களை ...

Read More »

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனைசெய்வதற்கான யோசனை- நிராகரித்தது தமிழ்நாடு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை எங்களிடம் முன்வைத்தது என தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் எனினும் இலட்ச்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்று தமிழர்கள் ...

Read More »

தேர்தலில் யாரை ஆதரிப்பது?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொது மக்களுக்குத் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பல்கலைக்கழக ...

Read More »

யாஷிகாவின் திடீர் முடிவு

நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவரான யாஷிகா ஆனந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில்  இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபல மானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ...

Read More »