குமரன்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை சிறிலங்கா  உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு,எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு,சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,உட்படஐந்து அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன தரிசா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ...

Read More »

சோனாக்‌ஷி சின்காவின் திடீர் முடிவு…

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்கா எதிர்மறையான விஷயங்களால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் சோனாக்‌ஷி சின்கா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்‌ஷி.  இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகி இருப்பது தான் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில் தான் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது ட்விட்டர் கணக்கை ...

Read More »

முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் முகதடுப்புகள், முககவசங்கள் தயாரிப்பு

அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அபுதாபியில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் (3டி பிரிண்டிங்) முறையை பயன்படுத்தி முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்த பல்கலைக்கழகங்கள் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக பயன்படுத்தப்படும் முகதடுப்புகள் மற்றும் முககவசங்கள் அமீரக பல்கலைக்கழகங்கள் சார்பில் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண பிரதியெடுத்தலின் அடிப்படை நுட்பமானது ஒரு குறிப்பிட்ட ‘ரெஸின்’ ...

Read More »

சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா….

 சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான  அதோடு ஷில்பா ...

Read More »

நாகபூசணி அம்மன் ஆலய விவகாரம்: சைவ மக்களை மனவேதனைக்குட்படுத்தியுள்ளது!

ஆலயங்களின் புனிதத்துவத்தை கேள்விக்குறியாக்காத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவின் போது, பொலிஸ் மற்றும் இராணுவத்தரப்பினர் ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நடமாடித்திரிந்தமை சைவ மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற விழா கடந்த இருபதாம் திகதி இடம்பெற்றது. இலங்கையில் நாகர் ஆட்சியுடன் ...

Read More »

எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழை விடும்போது அவற்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் முக்கியமானது எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன். யாழ். ஊடக அமையம் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவரது ஊடகவியலாளர் மாநாட்டுத் தகவல் வருமாறு; கேள்வி ; தேர்தல் நடவடிக்கைக்கு மக்களிடம் நிதி உதவி கோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் ...

Read More »

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் 2018 ஆம் ஆண்டு கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி சந்தித்து பேசினர். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நீடித்து வந்த பகைமை மறைந்து இணக்கமான சூழல் உருவானது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற ...

Read More »

அவுஸ்திரேலியா e-கல்வி அறக்கட்டளை ஆசிரியர் பற்றாக்குறை நீக்க உதவி!

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து செயற்படும் e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள இவ்வாறான பாடசாலைகளுக்கு Zoom செயலி மூலமும் மற்றும் இணைய வழிகளின் மூலமும் கற்பிக்கும் திட்டமொன்றையே e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, ஆசிரியர்கள் தட்டுப்பாடான உயர்தர பாடங்களான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகியவற்றுக்கும், வகுப்பு 6-11 வரையான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ...

Read More »

இந்தியா – சீனா மோதலுக்குப் பின்னுள்ள வரலாறு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்கள், பாங்காங் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் யாவற்றையும் ‘திபெத்தின் ஐந்து விரல்கள்’ என்ற உருவகத்தோடு சீனா பிணைக்கிறது. அது என்ன திபெத்தின் ஐந்து விரல்கள்? மாவோவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கருத்தாக்கத்தின்படி, திபெத் பகுதிதான் சீனாவின் வலது உள்ளங்கை; லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசல பிரதேசம் ஆகியவை அதன் ஐந்து விரல்கள். அவற்றை விடுவிப்பது தனது கடமை என்று சீனா கருதுகிறது. இந்த ஐந்து விரல்களும் தன்னுடனேயே இருக்கும்படி உறுதிசெய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா ...

Read More »

விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்

 நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு  திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

Read More »