குமரன்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிச கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட காவல் துறையை  தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை  மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காவல் துறை  தாக்குதலை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் உத்தரவை நடைமுறைப்படுத்தமுயன்றவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறை  மீது தாக்குதலை நடத்தியதை தொடர்ந்தே ...

Read More »

அனலைதீவு கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள்…..

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதி நேற்று முன்தினம் காலை முதல் கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேறவோ, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவோ கடற்படையினர் அனுமதிக்க மறுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கடற்படையினர் இருவர் மீது மூவர் அடங்கிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களைத் தேடியே அனலைதீவு முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குழுவொன்றால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து கடற்படையினர் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவில் திங்கட்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு ...

Read More »

பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கும் அசோக் செல்வன்

 ஓ மை கடவுளே” எனும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பின் நடிகர் அசோக் செல்வன் பெண் இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக  நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான  “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ...

Read More »

மாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த ...

Read More »

கொழும்பில் சிறிலங்கா காவல் துறையால் தூக்கி வீசப்பட்ட யுவதி!

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் ; கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் சிறிலங்கா காவல் துறை தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது, ; கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே காவல் துறை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் ; யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகு வலி காரணமாக அவர் இன்று காலி – கராப்பிட்டிய போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை காவல் துறை  பிடித்து ...

Read More »

நாகவிகாரை மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் நாகவிகாரை மீது இனந்தெரியாத நபர்கள், இன்று (10) அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவகத்தையடுத்து, நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல், மோடடார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More »

சுயாதீனமான தேர்தலுக்கு அரசாங்கமே இடையூறு !

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கம் முயற்சித்த போதிலும் அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் நலன் கருதி சுயாதீனமாகச் செயற்பட்டமையின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமே இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ;நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கேள்வி- தேர்தல்கள் ...

Read More »

ஜீவனின் பெயரே இல்லை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று (9) வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படாத நிலையிலும் விருப்பிலக்கம் வெளிவராத நிலையிலும், ஆறுமுகன் தொண்டமான், மே மாதம் 26ஆம் திகதியன்று திடீரென மரணமடைந்தார். அவருடைய ...

Read More »

சீனாவில் கொரோனா பரவலை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்

சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவத்தொடங்கி விட்டது என்ற தகவலை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது எப்போது? – இந்தக் கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இப்போது எதிரொலிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. இதில் உண்மைத்தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து ...

Read More »

யாதும் ஊரே யாவரும் கேளிர்

அஜித் பட நடிகை ஒருவர் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா. சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் ...

Read More »