குமரன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது. ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது. ...

Read More »

’என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை’

 தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவியவர்களின் சுவாசக்காற்று மூலமாகவும் வைரஸ் பரவுவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, செய்தியாளர்களை சந்திக்கும் போது என அனைத்து நேரமும் முக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தார். அவருடைய ...

Read More »

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பத்தனை, கிறேக்கிலி தோட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், கொரோனா பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் ...

Read More »

ஜனாதிபதி உட்பட எவரையும் எங்களால் கொலை செய்யமுடியும்

பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன் தங்களுக்குள்ளது என தெரிவித்தமை குறித்த சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எங்களிடம் துப்பாக்கிகள் உள்ளனர் எங்கள் ஆட்க்கள் வெளியில் உள்ளனர் எங்களை சிறையில் வைத்திருப்பதை தவிர வேறு எதனையும் உங்களால் செய்ய முடியாது என முக்கிய குற்றவாளிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம், சிறைச்சாலை தலைவர், பாதுகாப்பு செயலாளர் ஏன் தேவைப்பட்டால் ஜனாதிபதியை கூட கொலை செய்வோம் ...

Read More »

தாத்தா கனவுல வந்து அடிப்பாரு… சிவகார்த்திகேயன்

செல்லம்மா என்ற பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் தாத்தா கனவுல வந்து அடிப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘செல்லம்மா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் என்ற பாடலை பாராட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இந்த பாடல் குறித்து தனது ...

Read More »

புலத்தினி புலனாய்வு பிரிவிரின் கண்களுக்கு மண்தூவியது எப்படி?

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு பிரிவிரின் கண்களுக்கு மண்தூவிட்டு தப்பி ஓடிய ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் எவ்வாறு தப்பி ஓடியுள்ளார் என புலனாய்வின் துப்பு துலக்கலில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது தயார இருந்து ஸாரா மற்றும் ஜாரானின் சகோதரர்கள் சாய்ந்தமருதில் மறைந்திருந்த தயாராக இருந்த போது தேசிய புலனாய்வு பிரிவின் தகவலாளியான லொறி ...

Read More »

மருத்துமவனையிலிருக்கும் பிரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உருக்கமான வேண்டுகோள்

எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாக பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். எனது உடல்நிலை குறித்து நான் கடும் வேதனையில் உள்ளேன் எனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருப்பதே அதனை விட அதிகவேதனையளிக்கின்றது என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல்நலக்குறைவுகள் ...

Read More »

கொரிய தீபகற்பத்தில் நீடிக்கும் பதற்றம்

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் ...

Read More »

2008 சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு பாதகமாக இரண்டு தவறான தீர்ப்பு வழங்கினேன்

2008-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கியதாக முன்னாள் நடுவர் பக்னர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அணி 2008-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த டெஸ்டில்தான் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சை குரங்கு என்று திட்டியதாக சர்ச்சை வெடித்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நடுவர்களின் ஒருதலைபட்சமான பல முடிவுகளால் தடுக்கப்பட்டது. இந்த டெஸ்டில் நடுவராக பணியாற்றியவர்களில் ஒருவரான அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) ...

Read More »

நேர்மையான, விலைபோகாத பிரதிநிதிகளைத் தெரிவு செய்க….!

நாம் வாக்களிக்கத் தவறின் விலைபோன வாக்குகளே எமது பிரதிநிதிகளைத் தீர்மானிக்கும் துர்ப்பாக்கியம் அரங்கேறிவிடும் எனவும் தேர்தலிலே சரியான, நேர்மையான, விலைபோகாத பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் எமது முழுக் கவனத்தையும் குவிப்போம். இதற்காக எமது மூன்று விருப்பு வாக்குகளையும் தவறாது பதிவிடுவோம் எனவும் தேர்தல் சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையானது, தேர்தல் அரசியல் எமது மக்களின் சுபீட்சமான எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையானது மக்களிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்து நிற்கின்றது. அதில் முதலாவதாக ...

Read More »