மருத்துமவனையிலிருக்கும் பிரியா அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உருக்கமான வேண்டுகோள்

எனது பிள்ளைகள் எனக்கு அருகில் இருப்பதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொள்வதாக பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார்.

எனது உடல்நிலை குறித்து நான் கடும் வேதனையில் உள்ளேன் எனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்திருப்பதே அதனை விட அதிகவேதனையளிக்கின்றது என பேர்த் மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா நடேஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ்தீவில் தனது இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல்நலக்குறைவுகள் குறித்து முறைப்பாடு செய்து வந்த நிலையில் கிறிஸ்மஸ்தீவில் சிடி ஸ்கான்வசதிகள் இல்லாததன் காரணமாக அவரை அதிகாரிகள் பேர்த்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவரது கணவர் நடேஸ் முருகப்பனும் பிள்ளைகள் கோபிகா தருணிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவிலேயே உள்ளனர்.

எனது உடல்நிலை காரணமாக நான் கடும் வேதனையில் உள்ளேன் அதனை விட எனது பிள்ளைகளை பிரிந்திருப்பது இன்னமும் அதிக மனவேதனையை ஏறபடுத்துகின்றது என பிரியா கார்டியனுக்கு தெரிவித்துள்ளார்.

அவர்களும் இங்கு இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான்கு தடவை கிறிஸ்மஸ் தீவில் உள்ள மருத்துவமனையில் என்னை அனுமதித்து மருத்துவபரிசோதனைகளை மேற்கொண்டார்கள் ஆனால் எனது வலிக்கான காரணத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக என்னால் சரியாக உறங்கமுடியவில்லை,நான் கடும் அழுத்தத்து உள்ளாகியுள்ளேன், தனிமையாக உணர்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது ஐந்து வயது மற்றும் 3 பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடியவேளை அவர்கள் அழுதார்கள் என பிரியா தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னை வருமாறு அழைக்கின்றனர் அல்லது இங்கு வரவிரும்புகின்றனர் என பிரியா தெரிவித்துள்ளார்.

நான் இந்த சிகிச்சையை பெறும்போது எனக்கு அவர்களின் ஆதரவு என குறிப்பிட்டுள்ள அவர் அவர்கள் எனது அருகில் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் இங்கு வந்து எனது அருகில் இருப்பதற்கு அனுமதியுங்கள் என அரசாங்கத்தை மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் தடுப்பிலிருந்தவேளை எனக்காக ஒரே ஆதரவாக எனது கணவர் மாத்திரமே காணப்பட்டார் என தெரிவித்துள்ள பிரியா அதிகாரிகள் தற்போது எனக்கு எனது குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த ஒரே ஆதரவையும் பறித்துவிட்டார்கள் நான் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.