அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் சர்வதேச அளவில் கடும்; எதிர்ப்பை சந்தித்துள்ளன. சீனாவை எதிர்கொள்வதற்கான முயற்சியாக கருதப்படும் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் அணுசக்தியில் இயங்ககூடிய நீர்மூழ்கியை அவுஸ்திரேலியாவிற்கு வழங்கவுள்ளன. பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தனது முதுகில் குத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது. மூன்று நாடுகளும் பனிப்போர்காலமனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என சீனா தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிகளிற்கான ஆயுதப்போட்டி ஆரம்பமாகலாம் என எச்சரித்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் சீனாவின் முதல் பதில் தாக்குதலில் அவுஸ்திரேலியாவே முதலில் உயிரிழக்கலாம் ...
Read More »குமரன்
குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசின் முடிவு
ஆஸ்திரேலிய நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 670 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக்கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
Read More »தமிழ் அகதி குடும்பத்தினரின் விசா காலம் மேலும் நீட்டிப்பு
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினரின் நடப்பு இணைப்பு விசாக்கள் காலாவதியாக இருந்த நிலையில், அவர்களது விசா காலம் மேலும் 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இதுதொடர்பான கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக அக்குடும்ப வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
Read More »ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்க உள்ளாராம். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார். கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் ...
Read More »ஆஸ்திரேலியக் குடியுரிமை விதிகளில் மாற்றம் அறிமுகம்
சில திறமைசாலிகள் குடியுரிமை பெறுவதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில், குடியுரிமை விதிகளில் சில மாற்றங்களை குடியேற்றம், குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், Alex Hawke நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். “ஆஸ்திரேலிய குடியுரிமை ஒரு அரிய சலுகை. அது எளிதில் கிடைக்கக்கூடியதொன்றல்ல. விண்ணப்ப தாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். நற்குணம் படைத்தவர்களாக (character) அவர்கள் இருக்க வேண்டும், அற நெறி கொண்டவர்களாக (values) அவர்கள் இருக்க வேண்டும், அத்துடன் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருக்க ...
Read More »பாரதி: ஒரு புரிதல்!
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரைக் குறித்தும் அவரது எழுத்துகளைக் குறித்தும் எழுதியும் பேசிக்கொண்டும் இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் எப்போதும்போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாரதியைக் குறித்து திராவிடர் கழகத்தின் இதழ் ஒன்றில் வெளியாகிவரும் கட்டுரைத் தொடர் அதற்கு ஒரு உதாரணம். அந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியர் அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை: பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது, இந்து மதத்தைக் காப்பதற்கான ஆரிய சமாஜத்தின் முயற்சிகளில் ஒன்று, பாரதியும் அதைத்தான் செய்தார்; அவர் மீசை வைத்துக்கொண்டது சாதி மறுப்பின் ...
Read More »கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது
காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளனர். ...
Read More »படத்துக்காக 4 வருடம் வளர்த்த முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக கொடுத்த விக்ரம் மருமகன்
விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது மகன் துருவ் விக்ரமும் ‘ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோ ஆகிவிட்டார். தற்போது விக்ரமுடன் ‘மகான்’ படத்திலும் நடித்துள்ளார். இதேபோல் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ...
Read More »அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம் – அமைச்சரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்
அரசாங்கத்தின் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இராஜாங்க அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இராஜாங்க அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை ...
Read More »தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர்!
அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மிக மோசமான அச்சுறுத்தல் குறித்து தமிழ் அரசியல்கைதிகளின் குடும்பத்தவர்கள்அச்சமடைந்துள்ளனர் . அவர்கள் இப்போது என்ன மன நிலையில் உள்ளனரோ என கவலைவெளியிட்டுள்ளதுடன் அவர்களை பார்வையிட அனுமதியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வேண்;டுகோள் விடுத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசிடம் உத்தியோகபூர்வமான கோரிக்கையியினைமுன் வைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (15.09.2021) காலை 11 மணிக்கு இடம்பெற்ற இணையவழியிலான ஊடக சந்திப்பின் போதே ...
Read More »