அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை

அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் சர்வதேச அளவில் கடும்; எதிர்ப்பை சந்தித்துள்ளன.

சீனாவை எதிர்கொள்வதற்கான முயற்சியாக கருதப்படும் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் அணுசக்தியில் இயங்ககூடிய நீர்மூழ்கியை அவுஸ்திரேலியாவிற்கு வழங்கவுள்ளன.

பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தனது முதுகில் குத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது.

மூன்று நாடுகளும் பனிப்போர்காலமனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என சீனா தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிகளிற்கான ஆயுதப்போட்டி ஆரம்பமாகலாம் என எச்சரித்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் சீனாவின் முதல் பதில் தாக்குதலில் அவுஸ்திரேலியாவே முதலில் உயிரிழக்கலாம் என தெரிவித்துள்ளது.

நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதற் அனுமதிக்ககூடாது என சீனா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய உடன்படிக்கை காரணமாக சீனாவுடன் மோதல் உருவாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அமெரிக்க பிரிட்டன் அவுஸ்திரேலிய தலைவர்கள் புதன்கிழமை அவுகஸ் உடன்படிக்கை குறித்து அறிவித்தனர்.

அவர்கள் சீனா குறித்து குறிப்பிடாத போதிலும் இந்த உடன்படிக்கை சீனாவை இலக்காக கொண்டது என்ற கருத்து காணப்படுகின்றது.

தென்சீனாவில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கான முயற்சி இதுவென கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்த உடன்படிக்கையை சீனாவிற்கு எதிரான நோக்கத்துடன் உருவாக்கவில்லை என பிரிட்டிஸ் பிரதமர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய உடன்படிக்கை காரணமாக பிரிட்டன் சீனாவுடன் யுத்தத்தை நோக்கி நகர்த்தப்படும் ஆபத்துள்ளதா என முன்னாள் பிரதமர் தெரேசா மே கேள்விஎழுப்பியுள்ளார்.

சர்வதேச சட்டத்தை பாதுகாப்பது குறித்து பிரிட்டன் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ள பொறிஸ்ஜோன்சன் இதுவே உலகில் உள்ள தனது நாடுகளிற்கு பிரிட்டன் வழங்கும் ஆலோசனை என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் அரசாங்கத்திற்கு நாங்கள் வழங்கும் வலுவான ஆலோசனை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவுடன் தான் செய்துகொண்ட மில்லியன் டொலர் நீர் மூழ்கி உடன்படிக்கையை இந்த புதிய உடன்படிக்கை அழித்துவிட்டது என்ற பிரான்சின் சீற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை பிரான்சின் முதுகில் குத்தும் உடன்படிக்கை என பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் குறி;பிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பி;ன் நடவடிக்கைகளை நினைவுபடுத்தும் மிருகத்தனமான எதிர்வுகூறமுடியாத ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை என அவர் இதனை வர்ணித்துள்ளார்.

அமெரிக்க பிரான்ஸ் நாடுகளிற்கு இடையிலான நட்புறவை குறிக்கும் நிகழ்வை பிரான்ஸ் இராஜதந்திரிகள் இரத்துச்செய்துள்ளனர்.