குமரன்

அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை!

பெண் குயின் திரைப்படம் வெளியீட்டுக்கு  தயாராகி இருக்கும் நிலையில், அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது. இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்? ...

Read More »

இனவெறியை வெறுக்கும் வெள்ளையின இளைஞர்கள்

ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் நடந்துவரும் போராட்டங்களில், கறுப்பினத்தவர்களுடன் கணிசமான அளவில் வெள்ளையர்களும் பங்கேற்றிருப்பது குறித்துப் பலரும் ஆச்சரியமாகப் பேசி வருகிறார்கள். கறுப்பினத்தவர்களுக்குத் தங்கள் முன்னோர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அவர்கள் முன்பு மண்டியிட்டு கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கும் வெள்ளையினத்தவர்களின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. லண்டனில் அடிமை வியாபாரி ராபர்ட் மில்லிகனின் சிலை அகற்றப்பட்டது. வெள்ளையர்களின் இந்தக் குற்றவுணர்வு நிச்சயம் போலியானது அல்ல. உள்நாட்டுப் போரும் கறுப்பின உரிமைகளும் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக சக வெள்ளையினத்தவர்களை எதிர்த்துப் ...

Read More »

முக்கிய அரசியல்வாதிகளை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 18 பேருக்கு எதிர்வரும் எதிர்வரும் புதன்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவன்ட்காட் நிறுவனம் தன்னிச்சையாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து அவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு ...

Read More »

ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணத்தில் பாரிய சந்தேகம்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது ...

Read More »

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி ஆவாரா?

அமெரிக்க துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில் இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ...

Read More »

இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்?…

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், நடிகை அமலாபால் இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு சிலர் ...

Read More »

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நீக்கப்படுகிறார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போரட்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் நீக்கப்படலாம் எனத் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேியா போர்டில் வேலை செய்த அதிகாரிகள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், மாநில அளவிலான கிரிக்கெட் சங்கத்திற்கான நிதியிலும் பிடித்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா போர்டின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி ...

Read More »

ஆஸ்திரேலியா- ஜப்பான் புதிய ஒப்பந்தம்!

ஆஸ்திரேலியாவில் ஜப்பான் ராணுவத்தையும் ஜப்பானில் ஆஸ்திரேலிய ராணுவத்தையும் அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், வரும் ஜூலை மாதம் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையே கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ‘Reciprocal Access Agreement’ எனப்படும் அந்த ஒப்பந்தம் ராணுவம் ரீதியாக மட்டுமின்றி குற்ற விவகாரங்கள், குடிவரவுக் கட்டுப்பாடுகள், வரி தொடர்பான விவகாரங்கள், பேரழிவு நிவாரண செயல்பாடுகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான முறையை உருவாக்குவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 2014ல் இரு நாடுகளுக்கிடையே இந்த ...

Read More »

இந்தியா – சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை!

இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கும் மோதல்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது, இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுசெல்ல கடல், நில மார்க்கங்களைப் பயன்படுத்தினர். மேலும் மேலும் நிலப்பரப்புகளைப் போரில் கைப்பற்றினர். அவர்களால் உருவானதுதான் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையும். பூசல்கள் தொடங்கிய இடம் 1834-ல் டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற சீக்கிய மன்னர் ஜம்மு-காஷ்மீருடன் ...

Read More »

இலங்கையில் இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம் – கேணல் ஹரிகரன்

இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயமுள்ளதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் இராஜதந்திர மூலோபாயங்கள் பற்றி எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தற்போதைய பூகோளச் சூழலில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் நல்லிணக்க அரசியல் காணப்படுவதால் இலங்கை விடயங்களில் இந்தியா தலையிடுவதற்கு வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதோடு இந்தியாவும் சீனாவும் இந்த விடயங்களை கூர்ந்து ...

Read More »