குமரன்

சட்டமன்ற திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ...

Read More »

வவுனியாவில் 7 மோட்டார் செல்கள் மீட்பு

வவுனியா குஞ்சுக்குளம் மற்றும் வேலங்குளம் பகுதிகளில் இருந்து வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் செல்களை விசேட அதிரடிப் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளப்பகுதி மற்றும் வேலங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர். குறித்த பகுதிக்கு விஜயம் செய்தகாவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் 7 மோட்டார் செல்கள் மற்றும் ஒரு கைக்குண்டையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ...

Read More »

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. இந்த ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசுடன் பேசி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாடு தொடர்பாக 03.05.2021அன்று அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ...

Read More »

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி

கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறி வருகிறது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு ...

Read More »

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து வந்த கப்பலில் இருந்த 12 பேர் புகலிடக் கோரிக்கை!

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் ...

Read More »

அசுரன் பட நடிகைக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது அசுரன் பட நடிகை கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி ...

Read More »

பயணத்தடை: இந்தியாவுக்கு எதிரான இனவாத அறிவிப்பா?

நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர். அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவல் கொடூரமான அளவில் செறிவடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி – பயண ஓட்டைகளை பயன்படுத்தி – யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் விபத்தில் மரணம்!

அவுஸ்திரேலியா- விக்டோரியாவின் Geelong பகுதியைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து அண்மையில் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் பின்னணி கொண்ட 38 வயதான நிக்சன் என்பவரே கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான நிக்சன் Geelong-இல் குடும்பத்துடன் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. முழுக்குடும்பமும் நிக்சனின் வருமானத்தில் தங்கி வாழ்ந்ததாகவும் திடீரென இவர் மரணமடைந்துள்ளதால் குடும்பத்தினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் ...

Read More »

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்?

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா,  ‘லங்காதீப’ விடம் பேசியுள்ளார்.   சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது. ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் ...

Read More »

ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உறுதியாகவில்லை- அமெரிக்கா மறுப்பு

ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது. ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான ...

Read More »