அவுஸ்திரேலியா- விக்டோரியாவின் Geelong பகுதியைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து அண்மையில் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பின்னணி கொண்ட 38 வயதான நிக்சன் என்பவரே கடந்த 20ம் திகதி உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையான நிக்சன் Geelong-இல் குடும்பத்துடன் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முழுக்குடும்பமும் நிக்சனின் வருமானத்தில் தங்கி வாழ்ந்ததாகவும் திடீரென இவர் மரணமடைந்துள்ளதால் குடும்பத்தினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிக்சன் குடும்பத்தினரின் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு Centrelink கொடுப்பனவும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal