நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை மன்று கடுமையாக எச்சரித்து ஆள் பிணையில் விடுவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தை கைது செய்தனர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் ...
Read More »குமரன்
இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு ...
Read More »உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, உலகில் உள்ள அனைவருக்கும் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறியதாவது: மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த ...
Read More »கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் ...
Read More »ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த ...
Read More »20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து
உத்தேச 20வது திருத்தத்தின் நகல்வடிவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டகுழுநகல்வடிவில் பல முரண்பாடுகள் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளது. 9பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களான அமைச்சர்கள் விமல்வீரவன்சவும் உதயகம்மன்பிலவும் இதனை தெரிவித்துள்ளனர். நகல்வடிவம் குறித்த கரிசனைகளை ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவிக்கப்போவதாக அவர்கள்தெரிவித்துள்ளனர். நகல்வடிவில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானிப்பார்கள் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இதேவேளை குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் அனைத்துவிடயங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர்விமல்வீரவன்ச அனைத்து பரிந்துரைகளும் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆளும் அமைப்பு தொடர்பான விடயங்களுக்கு ...
Read More »தியாகதீபம் திலீபனுக்குஅஞ்சலி- சிவாஜிலிங்கம் கைது
நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம்திலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் காவல்துறையினரால் கைதுசெய்ய்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் திலீபனுக்கு சிவாஜிலிங்கம் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More »யாழ். பொம்மைவெளி வீடமைப்புப் பிரச்சினை இந்திக்க அநுருத்த நேரில் ஆய்வு
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். ...
Read More »செய்தியாளர்கள் சட்டத்தைத் தவிர்த்தனர் என்ற சீனாவின் குறைகூறலை ஆஸ்திரேலியா மறுத்துள்ளது
சீனாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செய்தியாளர்கள் இருவர் தூதரகப் பாதுகாப்போடு வந்ததை அடுத்து, அவர்கள் மீதான சீன விசாரணையைத் தடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தனது தூதரக அதிகாரிகள் முறையாக நடந்துகொண்டார்கள் என்றும் அது குறிப்பிட்டது. செய்தியாளர்கள் பில் பிர்டல்ஸ் (Bill Birtles), மைக் ஸ்மித் (Mike Smith) இருவரும் சீனாவின் விசாரணையைத் தவிர்க்க, ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகள் உதவியதாக பெய்ச்சிங் கூறியது. அதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலிய அமைச்சர் ஒருவர், அவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேற சீனா ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். சீனாவின் காவல்துறை அதிகாரிகள் அவர்களை ...
Read More »தடம் மாறி ஆஸ்திரேலிய நதிக்குள் வந்த அண்டார்டிகா திமிங்கிலங்கள்
அண்டார்டிகாவில் காணப்படும் Humpback திமிங்கிலங்கள் தடம் மாறி ஆஸ்திரேலியாவின் நதியை அடைந்துள்ளன. இந்த வாரம் 3 Humpback திமிங்கிலங்கள் வட ஆஸ்திரேலியாவில் உள்ள நதியில் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அந்த நதியில் முதலைகள் அதிகமாக உள்ளன. 2 திமிங்கிலங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிட்டன என்றும் எஞ்சிய ஒன்று இருக்குமிடம் விசாரிக்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் கூறினர். திமிங்கிலம் காணப்பட்ட பகுதியில் படகு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் Humpback திமிங்கிலங்கள் காணப்படுவது இதுவே முதல்முறை.
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			