குமரன்

தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்

மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார். கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38.  ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார். திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது. இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து ...

Read More »

காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்து கவிதை (1959) எழுதினாலும் நாவல், சிறுகதை பெற்ற கவனத்தை நகுலனின் கவிதை பெறுவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இது தனிக்கவிதைகள் மூலமாக அல்லாமல், நீண்ட கவிதைகள் மூலமாகவே சாத்தியமாயிற்று. தனிக்கவிதைகளைத் தொடக்கக் காலத்திலும், தனது இறுதிக் காலத்திலும் எழுதியிருக்கிறார். ‘சிலை’ (1959) கவிதையில் சடங்கு வழிப்பட்ட மத நம்பிக்கைகளை, ‘சிலை முன் பல பேசி என்ன பயன்?’ என்று கேள்விக்கு உட்படுத்துகிறார். அதே கவிதையில், ‘சாவுக்கும் அர்த்தமுண்டு/ சம்போகத்தில் நாசமுண்டு’ எனச் சொல்வதன் மூலமாகப் புலன்வழி வாழ்க்கையின் எல்லைகளைச் ...

Read More »

ஸ்டீவ் ஸ்மித் போல் உருவ ஒற்றுமை கொண்ட அமெரிக்க படைவீரர்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகள் தங்களின் தூதர்கள், குடிமக்களை வெளியேற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த ...

Read More »

நடிகையாக அறிமுகமாகும் ஷாருக்கான் மகள்

பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்கும் வெப் தொடர் மூலம் நடிகர் ஷாருக்கானின் மகள் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்குகிறார். இதில் இந்தி ...

Read More »

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டiதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன். இன்று திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்;கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும்;, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read More »

தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐநா மனித உரிமை ...

Read More »

நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

## சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதானரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் துள்ளிப்பாய்ந்த பல தசாப்தங்களுக்கு பிறகு புதிய நவீனமயமாக்கத்தை தொடங்குகிறது ; ## ஒரு சில தசாப்தங்களில், முனனென்றும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைச் செய்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி தலைமைதாங்கியிருக்கிறது ; ## ஐக்கியப்பட்ட, சுபிட்சம் நிறைந்ந, கலாசார ரீதியில் மேம்பட்ட, ஒத்திசைவுடைய, அழகான புதிய நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்புவதற்கு ...

Read More »

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரித்த தொழிற்சங்கவாதி சிஐடியினரால் கைது

தேசிய சேவை சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாகவும் ஊடக சந்திப்பு நடத்தி ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளா.

Read More »

யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற 21 பேருக்கு தொற்று

யாழ். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை யடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. மெல்பேர்ணில் பேரணியில் கலந்துகொண்ட 4,000 பேர் காவல்துறையினரின் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றதால் காவல்துறையினர் அவர்கள் மீது மிளகுத் தெளிப்பைத் தெளித்தனர். அத்துடன் 218 பேரைக் கைது செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் 7 காவல்றையினர் காயமடைந்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக 5,452 அவுஸ்ரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று ...

Read More »