பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்கும் வெப் தொடர் மூலம் நடிகர் ஷாருக்கானின் மகள் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்குகிறார்.

இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் மகன் இப்ராகிமும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் நடிப்பதற்காக நடிகை சுஹானா கான் நடிப்பு பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இவர் பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் ஷோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க வந்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal