குமரன்

தனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்!

சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட 50 இலட்சம் வாக்குகளும் அதேதேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கும் போது, அவர், வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையைச் சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். ...

Read More »

நயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்?

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் ...

Read More »

1,500 ஏழைகளுடன் இணைந்து உணவருந்திய பாப்பரசர்!

பாப்­ப­ரசர் பிரான் சிஸ்  தலை­மையில் வத்­திக்­கானில் சுமார் 1,500 வறிய  மற்றும் வீடு­வா­ச­லற்ற மக்­க­ளுக்கு  உணவு அளிக்கும் நிகழ்வு  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  இடம்­பெற்­றுள்­ளது. உலக வறியோர் தினத்­தை­யொட்­டியே மேற்­படி உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு ஏற்­பாடு செய்­யப்­ப­ட்­டி­ருந்­தது. இந்த உண­வ­ளிக்கும் நிகழ்­விற்கு முன்னர்  வத்­திக்­கா­னி­லுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் உரை­யாற்­றிய பாப்­ப­ரசர்,  சமூ­கத்தில் காணப்­படும் வேறு­பா­டு­களே வறு­மைக்குக் காரணம் எனத் தெரி­வித்தார். எத்­தனை; வயோ­தி­பர்கள், பிறக்­காத குழந்­தைகள்,  விசேட தேவை­யுள்­ள­வர்கள் மற்றும் வறிய மக்கள் ஆகியோர் பய­னற்ற­வர்­க­ளாக கரு­தப்­பட்டு வரு­கின்­றனர். நாம் நம்­மி­டை­யே­யான இடைவெளி அதி­க­ரிப்­பது ...

Read More »

அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?

தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரத்துக்குள் இறுதி தீர்மானமெடுப்பதற்கு சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்கால அரசியல் ...

Read More »

கோத்தாபயவின் வெற்றியையும் சஜித்தின் தோல்வியையும் புரிந்துகொள்தல்!

கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று  நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும்  அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். ஞாயிறன்று  தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் ...

Read More »

தமிழர்கள் மீது தாக்குதல்!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.   இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.         மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது ...

Read More »

வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு

வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார். கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது!

கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்து ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவரை காவல் துறையினர்  கைது செய்தனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதி மட்டும் இன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் தீ பற்றி எரிகிறது. வறண்ட வானிலை காரணமாக தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுதீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 10 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமான வனப்பகுதி ...

Read More »

100% காதல் – விமர்சனம்

ஈகோவால் காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்சினைகள்தான் ‘100% காதல்’. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் எப்போதுமே தான் ஃபர்ஸ்ட், பெஸ்ட் என்ற ஈகோ அவருக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிராமத்தில் ஒழுங்காகப் படிக்காததால், ஜி.வி.பிரகாஷ் படிக்கும் கல்லூரியில் சேர வருகிறார், அவருடைய முறைப்பெண் ஷாலினி பாண்டே. ‘மாமா… மாமா…’ என ஜி.வி.பிரகாஷையே சுற்றிவரும் ஷாலினி பாண்டேவை, அவர் கண்டு கொள்வதே இல்லை. ஒழுங்காகப் படிப்பு வராததால் ஃபெயிலாகி விடுவேன் என ஷாலினி ...

Read More »

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது. கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

Read More »