பாப்பரசர் பிரான் சிஸ் தலைமையில் வத்திக்கானில் சுமார் 1,500 வறிய மற்றும் வீடுவாசலற்ற மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உலக வறியோர் தினத்தையொட்டியே மேற்படி உணவளிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த உணவளிக்கும் நிகழ்விற்கு முன்னர் வத்திக்கானிலுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றிய பாப்பரசர், சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகளே வறுமைக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
எத்தனை; வயோதிபர்கள், பிறக்காத குழந்தைகள், விசேட தேவையுள்ளவர்கள் மற்றும் வறிய மக்கள் ஆகியோர் பயனற்றவர்களாக கருதப்பட்டு வருகின்றனர். நாம் நம்மிடையேயான இடைவெளி அதிகரிப்பது குறித்துக் கவலையின்றி எமது வழியில் விரைந்து சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிலரின் பேராசையால் பலர் வறுமையில் வாடுகின்றனர்” என பாப்பரசர் தெரிவித்தார்.
ஆறாம் போல் மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி உணவளிக்கும் நிகழ்வின்போது பாப்பரசர் அங்கிருந்திய 1,500 பேருடனும் அமர்ந்து உணவருந்தினார்.