ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.

மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘ நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை” என்றார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது நிலமை சுமுகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Eelamurasu Australia Online News Portal