யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாகவும் அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இருக்கலாமென வைத்தியர் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியுள்ளார். இது குறித்து இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ...
Read More »குமரன்
வன்னியில் சிங்களவர் ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி
வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் ஆபத்து ஏற்படும்; எனவும் அவர் தெரிவிததுள்ளார். தனிப்பட்டவர்கள் ...
Read More »தமிழ் மக்கள் மீது கொடூரமான கொலைகள் நடாத்தப்பட்டது! -மணிவண்ணன்
இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை எடுத்து கூறினாலே சாட்சிகள் போதுமானதாகும். சாட்சியங்கள் இல்லை என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ...
Read More »அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன் – கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து தெரிவித்துள்ளார். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர ...
Read More »மாதிரி வாக்குச்சீட்டுகளில் மோசடி !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணபவன் அவர்கள் தனது படம், பெயர் அச்சிட்டு விநியோகித்து வரும் மாதிரி வாக்குச்சீட்டுகளில் எங்களது சுயேச்சைக்குழு – 8 இன் மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக வாழைப்பழச் சின்னத்தை அச்சிட்டு மோசடியான முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றது. இவர்களது தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று ...
Read More »அன்பு ரகுமான்… அஞ்ச வேண்டாம்
பாலிவுட்டில் தனக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக வைரமுத்து டுவிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்ற திடுக்கிடும் புகாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெறுவதற்கு முன்புவரை 11 வருடங்களில் 33 இந்தி படங்களுக்கு இசையமைத்து வட இந்தியாவில் ஏ.ஆர்.ரகுமான் கொடி கட்டி பறந்தார். ஆனால் ஆஸ்கார் விருது பெற்ற பிறகு அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்தன. ...
Read More »அவுஸ்திரேலியாவில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம்- மருத்துவ அதிகாரி
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என பிரதிமருத்துவ அதிகாரி மைக்கல் கிட் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் 532 பேரும், நியுசவுத்வேல்சில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இது வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 14,935 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மைக்கல் கிட் 161 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் ...
Read More »சிவில் உரிமைகள் இயக்க முன்னோடி ஜான் லூயிஸ் மறைவு
சிவில் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஜான் லூயிஸ் எம்பி-யின் இறுதி ஊர்வலம், அவரது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டக்களமான எட்மண்ட் பெட்டஸ் பாலத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் வசித்து வந்தவர் ஜான் லூயிஸ். சிவில் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடியும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீண்டகால உறுப்பினருமான இவர் கடந்த 17ம் திகதி காலமானார். அவருக்கு வயது 80. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ...
Read More »கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பினார். பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா ...
Read More »முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்?
ஆறாம் திகதி மாலைதேநீரின் போது முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு ஐந்தாம் திகதி காலை ஏழு மணிமுதல் மாலை ஐந்துமணிவரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம்திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஆறாம் திகதி மதியஉணவுக்கு முன்னதாக முதலாவது முடிவை அறிவிக்க எண்ணியுள்ளோம் அனைத்தும் திட்டமிடப்பட்டபடி நடைபெற்றால் மதியதேநீர் வேளையின் போது முதலாவது முடிவு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 2020 பொதுத்தேர்தலில் ...
Read More »