குமரன்

வீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா குற்றம்சாட்டியது சர்ச்சையானது. இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனாவின் இல்லத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் ...

Read More »

வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா வீரர்கள்

சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வுக்கு பிறகு நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. கடந்த மே 31-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் ...

Read More »

வயற்காணித் சுத்தப்படுத்தலை தடுத்து இராணுவத்தினர் அடாவடி..

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் சுத்தம் செய்யும்போது, இராணுவத்தினர் குறித்த வயற்காணிகளைத் சுத்தம் செய்வதைத் தடுத்துள்ளனர். இராணுவத்தினுடைய குறித்த அடாவடிச் செயற்பாட்டினை, விவசாயிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமை ஆராய்ந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலைப் பகுதியில், கருவேப்ப முறிப்பு குளத்தின் கீழ் ...

Read More »

தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக உபாலி தேரர் நியமனம்

புத்திசாதூர்யம் மிகுந்த நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடாத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம் இன்று முற்பகல் தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது. இம்முறை தர்ம போதனை, சொலொஸ்மஸ்தானாதிபதி கெடிகே ரஜமஹா விகாராதிபதி அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய உபாலி தேரரினால் நடத்தப்பட்டது. தொல்பொருள் ஆலோசனை குழுவில் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் நியமிக்கப்பட்ட நிலையில் இதன்போது அதற்கான நியமனத்தை பிரதமர் வழங்கியதுடன், நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக ...

Read More »

கொழும்பை சுற்றி வளைப்போம் :ராஜபக்சக்களின் இராணுவத்தை கண்டு அஞ்சமாட்டோம் – ஞானசார தேரர் சூளுரை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மேலும் ராஜபக்ஷக்களின் இராணுவத்தினரைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த அரசாங்கத்திலும் கிழக்கு முனையம் தொடர்பில் ஒப்பந்தம் செய்வதற்கு ...

Read More »

எதிர்காலத்துக்கு வாக்களித்தல்?

தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.” – அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர்    கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம். பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப்பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான்  என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் ...

Read More »

ஷானி அபேசேகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  ஷானி அபேசேகர, மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென ​தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் சுகயீனம் காரணமாகவே ஷானி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஷானி அபேசேகர அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வார்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சரத் பண்டார மற்றும் காவல் துறை  இருவர் உள்ளிட்ட 22 பேர் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே தமிழ் மக்களுக்கான கட்சி

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி விட்டு தேர்தலுக்குப் பின் அதற்கு நேரெதிராக தான் செயற்பட்டார்கள். இதுதான் வரலாறு. இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாடாளுமன்றில் இருக்க கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் அதற்குப் ...

Read More »

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது. முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாகவும், படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  மேலும் இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ...

Read More »

வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் 4 மாதம் விளையாடும் நியூசிலாந்து வீரர்

வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார். 8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் ...

Read More »