குமரன்

கடற்படையில் இருந்து விலகினார் யோஷித ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதா னியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப் பூர்வமாக இராஜினாமா செய்ததை யோஷித உறுதிப் படுத்தியுள்ளார். தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஒக் டோபர் 10ஆம் திகதி கடற்படையிலிருந்து விலகியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித தெரிவித்துள்ளார். இந்நிலையில், 14 வருடங்கள் கடற்படையில் பணியாற் றிய பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் ...

Read More »

சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு திங்கட்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு உத்தரவு வழங்கப்பட்டது. இதன் போது கடந்த தவணையில் அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வாக்குமூலம் ...

Read More »

40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை – ஹேமமாலினி

எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் நடிகர்- நடிகைகளிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து பாலிவுட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அங்குள்ள சில டிவி சேனல்கள், திரைத்துறையினர் ...

Read More »

பொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்

இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இன்றைய உலக ஒழுங்கை கட்டமைப்பு செய்ததோ அவ்வாறே கொரோனா என்கின்ற உயிர்க்கொல்லி நோய் இந்த உலக ஒழுங்கை கொரோனாவுக்கு பின்னா உலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது. கொரோனாவுக்கு பின்னான உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பாக அமெரிக்காவின் இரண்டாவது அதிகாரம் படைத்த பதவி வகிக்கக்கூடிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (United states Secretary of State) மைக் கொம்பியோ (Mike Pompeo) இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இன்றைய நெருக்கடியான சூழலில் ராஜரீக பயணத்தை மேற்கொள்வது ...

Read More »

20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு

இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தது. எந்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததோ அதே 19 ஆவது திருத்தத்தை ...

Read More »

முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா….

பிக்பாஸ் 4வது சீசனில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட நடிகை ரேகா, பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். ...

Read More »

ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை

ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு ...

Read More »

வீதியில் புலிக்குட்டியுடன் நடைப் பயிற்சி செய்த சிறுமி!

மெக்ஸிகோவில் சிறுமியொருவர் தனது புலிக்குட்டியுடன் வீதியில்  நடைப் பயிற்சி செய்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.   குவாசேவ் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், நாயை அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக்குட்டியை அழைத்துச்  சென்றுள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Read More »

ரிசாத்திடம் தொடர்ந்து விசாரணை – அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரிஷாத் பதியுதீனிக்கு அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு குடியிருப்பில் மறைந்திருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மறைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களான வைத்தியர் மற்றும் அவரது மனைவி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேவேளை முன்னாள்அமைச்சரை ...

Read More »

விக்கினேஸ்வரனை நேற்றிரவு சந்தித்தார் மாவை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் சந்தித்து –  மனந்திறந்து பேசியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் உருவாகிவரும் மாற்றம் ஒன்றைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது.

Read More »