முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரிஷாத் பதியுதீனிக்கு அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு குடியிருப்பில் மறைந்திருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை மறைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்களான வைத்தியர் மற்றும் அவரது மனைவி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதேவேளை முன்னாள்அமைச்சரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரிசாத் பதியுதீன் தலைமறைவாகயிருப்பதற்கு உதவிய அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal