கடற்படையில் இருந்து விலகினார் யோஷித ராஜபக்ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதா னியாக அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து புதிய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப் பூர்வமாக இராஜினாமா செய்ததை யோஷித உறுதிப் படுத்தியுள்ளார்.

தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஒக் டோபர் 10ஆம் திகதி கடற்படையிலிருந்து விலகியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 14 வருடங்கள் கடற்படையில் பணியாற் றிய பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் ஒக் டோபர் 10ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதா னியாக நியமிக்க ஒக்டோபர் 12ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும், இந்த நிலையில், அக்டோபர் 15 முதல் தனது புதிய பதவியை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் நான் அரசியல் ரீதியாகப் பழிவாங் கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகக் கடற்படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன் என யோஷித ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.