குமரன்

கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை நேற்று முன்தினம் (24) கனடாவில் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையிலேயே என்னைப் பொறுத்தவரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னைப் பார்க்கின்றேன். “இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை ...

Read More »

மாவீரர் தின தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் (26), குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று, கிளிநொச்சி நீதிமன்றத்தில், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால், 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் ...

Read More »

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மொழியாய்! விழியாய்! வழியாய்! எங்கள் உயிராய்! உணர்வாய்! அறிவாய்! ஆற்றலாய்! மானமாய்! வீரமாய்! எங்கள் முகமாய்! முகவரியாய்! பெருமைமிகு அடையாளமாய்! பெரும்வீர வரலாறாய் இருப்பவன் இவன்! சுதந்திரக் காற்று! சுடரொளிக் கீற்று! புரட்சியின் பெரும் வெடிப்பு! தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் துடிப்பு! ஆண்டுப் பலவாய் அன்னைத் தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்! புறநானூற்று வீரம் படைத்த மறவன்! மண்ணின் மானம் காக்க வீரர் படை நடத்தியவன் இவன்! அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு உயர்ந்ததென்று உணர்த்தியவன்! இவன் எங்கள் ...

Read More »

பல்கலைக்கழக கனவுடன் உள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினம் (26) ஆரம்பிக்கப்படுவதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலியா: கொரோனா தடுப்பூசி போடச்சொல்வது சுதந்திரத்தை பறிப்பதாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சமீபத்திய கணக்குப்படி, 12 வயதுக்கு மேற்பட்ட 93.4 சதவீதமானோர் விக்டோரியா மாநிலத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 89 சதவீதமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர். இவ்வாறான சூழலில், கொரோனா தடுப்பூசி எதிராக தகவல்களை பரப்பும் விதமாக ‘உலகளாவிய சுதந்திர பேரணி’ என்ற பெயரில் பிரிஸ்பேன், சிட்னி, அடியலெட், பெர்த், மற்றும் டார்வின் ஆகிய பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. “தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை கடைப்பிடிக்கும் அரசாங்கங்களை நாம் கொண்டிருப்போமே என்றால் இனி நாம் சுதந்திரமாக இருக்க ...

Read More »

ஆஸ்திரேலியா: விசா மோசடியில் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய புலம்பெயர்வு முகவர் ஜாக் தா கூற்றுப்படி, ஆங்கில மொழியை பெரிதும் அறியாத பெருமளவிலான வெளிநாட்டவர்கள் விசா விண்ணப்பங்களை பரிசீலணை செய்யப்படுவதற்காக புலம்பெயர்வு முகவர்களை நம்பியிருக்கின்றனர். ஆஸ்திரேலிய உள்துறையின் கணக்குப்படி, கொரோனா முந்தைய காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 500 விசா மோசடி குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Read More »

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு- 31 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர். பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அந்த படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மைன் தெரிவித்தார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் ...

Read More »

சிக்கலில் இருந்து மீண்ட சிம்பு…

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் பெரும் சிக்கலுக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியானதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ...

Read More »

வடக்கின் அபிவிருத்தி

அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று க்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை, நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதும் எதுவித உத்தரவாதமோ விசேட கவனிப்போ இன்றி, நாட்டின் ஏனைய பகுதியினருடன் அவர்களை போட்டியிட நிர்ப்பந்திப்பதும்  அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சியாகவே கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட ...

Read More »