குமரன்

அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் இளம்பெண் ஒருவர் பலி!

அவுஸ்ரேலியாவில் உல்லாச விடுதி ஒன்றில் பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர்  விசாரணை தொடங்கியுள்ளனர். பிரித்தானியவை சேர்ந்த Stacey Tierney என்ற 29 வயது இளம்பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள strip clubல் நடன அழகியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி காலை Stacey அந்த உல்லாச விடுதியில் பிணமாக கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை Staceyன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ...

Read More »

இழுப்பறைக்கு கீழ் மாட்டிக்கொண்ட தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2 வயது சிறுவன்

அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்தபோது இழுப்பறை மீது ஏறியுள்ளனர். அப்போது இழுப்பறை திடீரென சாய்ந்தது. இதில் இரட்டையர்களில் ஒருவர் இழுப்பறைக் கீழ் சிக்கி வலியால் கதறியுள்ளார். இதனை கண்ட மற்றொரு சகோதரன் அவனை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளான். பல வழிகளில் தீர்வு காண முயன்று தோல்வி அடைந்ததால், வெறும் கைகளால் இழுப்பறையை தூக்க முயற்சி செய்துள்ளான். பின்னர் அதுவும் முடியாத காரணத்தினால் இழுப்பறையை பலம் கொண்டு முன்னே தள்ளியுள்ளான். இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட கீழே ...

Read More »

நாவற்குழி சிங்களவரிற்கும் பொருத்துவீடுகள்?

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் மீள்குடியேற்ற அமைச்சின் வீடுகள் கிட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 340 வரையிலான சிங்கள குடியேற்றவாசிகள் மஹிந்த ஆட்சி காலத்தில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு வீடமைப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டனர். பின்னராக சிங்கள மதவாத அமைப்புக்களினால் படிப்படியாக நிரந்தர கல்வீடுகள் அமைத்து வழங்கப்பட்டதுடன் பாரிய விகாரையும் அமைத்து குடியேற்றதிட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படை மற்றும் படையினர் உடைய இரு முகாம்கள் அப்பகுதியினுள் அமைக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நிரந்தர வீடுகள் கிட்டியிராத ...

Read More »

சிறந்த பிரஷ்

வழக்கமான பிரஷ் பயன்பாட்டில், பல் இடுக்குகளில் சுத்தம் செய்ய முடியாது. அந்த குறையை போக்கும் விதமான மிகச் சிறிய பிரஷ் இது. ஊசி முனை அமைப்பில் பற்களை சுத்தம் செய்யும். இதன் வடிவமைப்பு காரணமாக ஈறுகளில் காயம் ஏற்படாது.

Read More »

“அன்று சுஜாதா சொன்னது, இன்று நிஜமாகிறது!’’ – கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து…. வளர்ந்து வரும் சினிமா இளைஞர்களில் நம்பிக்கையானவர்.  கவிதைகளில் தனது தடத்தை பதித்தவர்… நாவலிலும் கவனிக்க வைத்தார். நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மிளிர்ந்தார். தற்போது பல படங்களுக்கு திரைக்கதை அமைப்பது, வசனம் எழுதுவது, பாடல் எழுதுவது என கபிலன் செம பிஸி. தற்போது டி.ஆர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘கவண்’ படத்திற்கு எழுத்தாளர் சுபா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் இணைந்து கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் மூன்று பாடல்களையும் எழுதி இருக்கிறார். “இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் வேலை செய்யும் ...

Read More »

திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக மனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்” எனத் தெரிவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு இன்றைய பொதுக்குழுவில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ...

Read More »

சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் பட்டியலை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாகக் கையளிக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பதியப்பட்ட வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இரகசிய அறைகள்!

இந்த ஆண்டு(2017)  அக்டோபரில் பூமியை சிதைக்கும் அளவில் ஒரு கிரகம் வந்து தாக்கும் எனவும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் இரகசிய அறைகளை கட்டத்துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘Planet X: The 2017 Arrival’ எனும் ஆய்வு புத்தகத்தை வெளியிட்ட David Meade என்பவர் குறித்த தகவலை உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த பேரழிவு நிகழப்போவதகவும், பூமி சின்னா பின்னமாக உடைவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி குறித்த தகவலை அறிந்த உலக ...

Read More »

சாவித்திரி வாழ்க்கை வரலாறு – 2 கதாநாயகிகள்

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் 1950, 60 மற்றும் 70-களில் 310-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, சினிமா படமாக தயாராகிறது. பாசமலர், தேவதாஸ், திருவிளையாடல், குறவஞ்சி, கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, கர்ணன், பரிசு, களத்தூர் கண்ணம்மா என்று சாவித்திரி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ...

Read More »

அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று அவுஸ்ரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. ...

Read More »