இந்திய பண்பாடு, அதோடு கலந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் பிரிட்டீஷ் நாகரிகம் இந்த மூன்றையும் தனக்குள் வசீகரித்துக்கொண்டு, தனித்து விளங்கிய ஓர் ஒப்பற்ற பெண்மணி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஷூட்டிங்கை முதன் முதலில் நான் பார்த்தது 1975-ம் ஆண்டு ஏவி.எம். ஸ்டூடியோவில் தான். ஒருநாள் மாலை வேளையில் இயக்குனர் மகேந்திரன் என்னிடம் வந்து, ‘ஜெயலலிதா அம்மாவை ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா?’ என்று கேட்டார். நான் அதுவரை ஜெயலலிதா பட ஷூட்டிங்கை பார்த்ததில்லை என்பதால், அதிக ...
Read More »குமரன்
அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு!
பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க மந்திரி பேச்சுக்கு இம்ரான்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் டெலி போனில் பேசினார். அப்போது இவருக்கு வாழ்த்து கூறிய அவர் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட பாகிஸ்தானின் பங்கு குறித்து விவாதித்தார். பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் ஒரு திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர் ...
Read More »காணாமல்போனோர் குறித்து முக்கிய தகவல்!- சாலிய பீரிஸ்
நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநேகமானோர் காணாமல்போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பரிசீலிக்கும் போது ஆசியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியிலேயே அதிகமானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்ளது.முன்னைய ஆணைக்குழுக்களின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தற்போது பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்று காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல்போனோர் அலுவலகம் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. ...
Read More »‘தமிழர் மரபுரிமை பேரவை’ மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து “மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் ...
Read More »அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன்!
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Read More »என்னை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரமே சீர்குலையும் – டிரம்ப்
முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அதிர்ச்சியில் உள்ள டிரம்ப் தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை கோர்ட்டில் ஒத்துக்கொண்டார். ...
Read More »நான்கு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’
நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’. இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து ...
Read More »ராஜபக்ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்!
ராஜபக்ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ராஜபக்ஷக்கள் எந்த ...
Read More »மீண்டும் விடுதலை புலிகள் தோன்றுவர்!- விஜித ஹேரத்
யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு மக்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல . பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவில் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். வடக்கு முதலமைச்சர் மற்றும் ...
Read More »நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டும்!
யுத்தத்தை காரணம் காட்டியே வடக்கு மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் அரசியலை மேற்கொள்கின்றனர் என குற்றம் சுமத்தும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் வகமுல்ல உதித்த தேரர் நாட்டை சீரழிக்கும் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்கவேண்டுமென தெரிவித்தார். தேசிய பிக்குகள் தினத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி நினைவுகூறவிருக்கும் புத்தசாசன பிக்குகள் அத்தினத்தை முன்னிட்டு இடம்பெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்த ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று புத்தசாசன கலாசார மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது ...
Read More »