குமரன்

புதிய அரசியல் அமைப்பு – கட்சிகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சி

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய மக்கள் அமைப்பை உருவாக்குவதற்காக எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேலும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி கூறியிருந்தது. இதனடிப்படையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்கள் மற்றும் லங்கா சமசமாஜக் கடசியின் தலைவர்கள் இடையில் நேற்று சமசமாஜக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னிலை சோசலிசக் கட்சியின் கோரிக்கைக்கு அமைய தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாக லங்கா சமசமாஜக் கட்சியின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது. ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது ...

Read More »

அத்தியாவசியப்பொருட்கள் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் 66.4 வீதமான மக்கள் அதிருப்தி

இலங்கையில்  ஏற்பட்ட கொரோனா ; வைரஸ் பரவல் ; காரணமாக சுகாதாரநலன், வாழ்வாதாரம், கல்வி, சமூக உறவுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்களிலும் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இந்த நெருக்கடி கையாளப்பட்ட விதம் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் கண்ணோட்டத்தை அறிந்துகொள்ளும் நோக்கிலான ஆய்வொன்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது பல்வேறு விடயப்பரப்புக்களின் கீழ் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தைப் பயன்படுத்தி, நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள முக்கிய நான்கு இனச்சமூகங்களையும் கிராமப்புற, நகர்ப்புற சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய 1000 பேரை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ;அதன்மூலம் பெறப்பட்ட விபரங்களை அடிப்படையாகக்கொண்டு ...

Read More »

சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதம்

யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தாம் அறிந்துகொண்டதாகவும், யாழ் மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராக இருக்கின்ற நிலையில் தமிழ்மொழி தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை நியமிப்பது இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் அவர் கூறியுள்ள விடயங்கலாவது, எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில்,யாழ் மாவட்டத்திற்கு ...

Read More »

தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி

பொழுதைப் போக்கவும், அரட்டை அடிக்கவும் இணையத்துக்கு வரும் பெரும்பாலானோர் மத்தியில் ஆக்கபூர்வமாக இணையத்தைப் பயன்படுத்துவோர் ஆங்காங்கே உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இணையத்தில் அறிவுபூர்வமான தகவல்களைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது விக்கிப்பீடியா எனும் களஞ்சியமாகும். அத்தகைய இணையக் கலைக் களஞ்சியத்தில் தமிழில் ஐம்பதாயிரத்துக்கும் மேல் தொகுப்புகள் செய்து, உலகின் ஐந்தாவது நபராக இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அருளரசன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கனகரத்தினம், கனடாவைச் சேர்ந்த நக்கீரன், இலங்கையைச் சேர்ந்த அன்ரன், மதுரையைச் சேர்ந்த எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரையடுத்து இந்த இமாலயப் பங்களிப்பைச் செய்துவரும் இணையவாசி ...

Read More »

நியூசவுத் வேல்ஸ் 145 பேருக்கு கோவிட் தொற்று! குயின்ஸ்லாந்தில் புதிதாக ஒருவருக்கு

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 145 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகிவருகிறது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 145 பேரில் 66 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 79 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 51 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு ...

Read More »

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

கொரோனா பரவலைk கட்டுப்படுத்த அதிபர் மேக்ரான் தலைமையிலான பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி ...

Read More »

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக பல முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். ...

Read More »

புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும்- பாதகமான விடயங்களை நிராகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடுநிலை வெளிவிவகார கொள்கைகைய இலங்கை பின்பற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவை பேணவேண்டும்,நாங்கள் சீனா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் சிறந்த உறவை பேணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புத்துயுர்கொடுப்பதற்கான பொதுவான நீண்டகால கொள்கை கட்டமைப்பே அவசியம் பொதுவான எதிர்கட்சி கூட்டணி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசமைப்பினால் பாதுகாக்கப்பட்ட பொதுவான கொள்கைகளே ...

Read More »

கிழக்குப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணமும் சாதனை

மருத்துவ பீடங்களுக்கிடையிலான முதலாவது “அகில இலங்கை நரம்பியல் வினாவிடைப் போட்டி”யில் கிழக்குப்மற்றும்   யாழ்ப்பாண   பல்கலைக்கழகங்கள் மூன்றாம் மற்றும் முதலாம் இடங்களை சுவீகரித்துச் சாதனை புரிந்துள்ளன.இம்மாதம் 20ஆம் திகதி இலங்கை நரம்பியல் சங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் zoom வழிப்போட்டியாக இந்நிகழ்வு நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு இருந்தது. பின்னணியிலிருந்த யாழ்ப்பாண, கொழும்பு பல்கலைக்கழகங்கள் போட்டியின்  இறுதிக் கட்டத்தில் மிகச்சிறப்பாக பதிலளித்து  முன்னிலை வகித்தமை பார்வையாளர்களை  உற்சாகத்தில் ஆழ்த்தியது .போட்டியின் இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தில் ...

Read More »