புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும்- பாதகமான விடயங்களை நிராகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடுநிலை வெளிவிவகார கொள்கைகைய இலங்கை பின்பற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவை பேணவேண்டும்,நாங்கள் சீனா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் சிறந்த உறவை பேணவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு புத்துயுர்கொடுப்பதற்கான பொதுவான நீண்டகால கொள்கை கட்டமைப்பே அவசியம் பொதுவான எதிர்கட்சி கூட்டணி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பினால் பாதுகாக்கப்பட்ட பொதுவான கொள்கைகளே எங்களிற்கு அவசியம் சீனா ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளில் இந்த நிலை காணப்படுகின்றது எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பது வேறு விடயம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உறுதியான கொள்கை கட்டமைப்பை உறுவாக்குவது வேறு விடயம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவான கொள்கை திட்டம் குறித்த இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கொளகை கட்டமைப்பு இ;ல்லாததே நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்தமைக்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைமாணவர்களிற்கு டப்பினை வழங்கும் விடயத்தில் கூட நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தவர்களால் இணக்கப்பாட்டிற்கு வரமுடியவில்லை என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க எனவே நீண்ட கால கொள்கை கட்டமைப்பே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.