வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த சோதனைக்கு மத்தியில் அங்கு ...
Read More »குமரன்
வாழ்வகம் தலைவருக்கு நேற்று ‘யாழ் விருது’ வழங்கப்பட்டது
யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான ‘நல்லைக் குமரன்’ வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் நேற்று(05) நாவலர் மண்டபத்தில் மாநகர ஆணையாளரும் யாழ். மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுத் தலைவருமான இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ண னும், சிறப்பு அதிதியாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரனும் பங்குபற்றினர். ஆசி உரைகளை நல்லை ஆதீன முதல்வர், வீணாகான குருபீட பீடாதிபதி சிவ ஶ்ரீ சபா வாசுதேவக் ...
Read More »ஒற்றுமைக்கான முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது- மனோ ஹக்கீமிடம் சம்பந்தன்
“அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்.” “அந்த ஒற்றுமை முயற்சியை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார் என மனோகணேசன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே சந்திப்பு, கூட்டமைப்பு ...
Read More »இனப்பரம்பலை மாற்றவா சிங்களக் குடியேற்றம்?
ஓன்றில் அதிகாரத்தைக் குறைப்பது; அல்லது, குடியேற்றத்தை நிகழ்த்தி இனப்பரம்பலைக் குறைப்பது. இதுதான், இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரம். இரண்டும் நல்ல திட்டமே! திட்டமிட்ட வகையில் நடைபெறும் குடியேற்றங்களால், தமிழர்களின் வடக்கு – கிழக்கு பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாட்டில், நிரந்தரமாக மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற விடாப்பிடியே இதிலிருந்து புலப்படும். இந்த வகையில்தான், இலங்கையின் சிங்கள பெரும்பான்மை அரசுகள், தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றன என்ற தமிழ்த் தரப்பின் குற்றச்சாட்டும் பலமுடையதாக ...
Read More »அரசியல் தலையீடற்ற விசாரணை தேவை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான வெளிப்படையான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (04) தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் பின்னணி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு ...
Read More »மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த அரசாங்கம்
வரலாறு காணாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடக அமையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “இந்த நாட்டில் உண்மையில் மிக மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசாங்கம் என்று சொன்னால், அது இதுவாகத் தான் இருக்கும். “பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் ...
Read More »அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது. விபத்தில் கப்பலுக்கு ...
Read More »புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கிய சூர்யா
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் ...
Read More »ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள். இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ...
Read More »இந்தியாவில் தயாரான Covid தடுப்பூசியை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது
மருந்துகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான Therapeutic Goods Administration (TGA) மேலும் இரண்டு COVID-19 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. Covaxin மற்றும் BBIBP-CorV தடுப்பூசிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிகள் என்பதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் பலர் நாடு திரும்ப ஒழுங்குகள் மேற் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட BBIBP-CorV தடுப்பூசிகளை TGA அங்கீகரிப்பதாகக் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இந்தத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களும் இந்நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக TGA வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. TGA அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளில் ஒன்றை ...
Read More »