குமரன்

கரோனா வைரஸின் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் தேவை

கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகையில், “கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிறையக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்த நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அப்போதுதான் கரோனா வைரஸ் மரபணு அளவில் எத்தகைய மாற்றம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கரோனா வைரஸ் நீடிக்காது. இப்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் ...

Read More »

சென்னையின் வரலாற்றை எப்போது எழுதப்போகிறது தமிழக அரசு?

ஆகஸ்ட் 22: சென்னை தினம் இந்தியாவின் பெருநகரங்களுள் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகத்தின் தலைநகரமான சென்னை. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார, கலாச்சார மையமாக விளங்கும் சென்னைப் பெருநகரத்துக்கு மாநில அரசின் சார்பில் அதிகாரபூர்வமான ஒரு விவரச் சுவடி வெளியிடப்படவில்லை என்பது நமது வரலாற்று ஆர்வமின்மைக்கு ஓர் உதாரணம். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சோழ மண்டலக் கடற்கரையில் கோட்டை கட்டுவதற்காக நிலம் வாங்கிய ஆகஸ்ட்- 22ம் தேதியை சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். சென்னை நகரப் பகுதிக்கு 2,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு என்று ...

Read More »

கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் !

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்காக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் Yongoh Hill குடியேற்றத் தடுப்பு மையத்திலிருந்து கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு 15 பேர் மாற்றப்பட்டிருந்தனர். முதலில் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றுவதற்கான முயற்சி மையத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு அடுத்த நாளே தீவு முகாமிற்கு மாற்றப்படுபவர்களுக்கு மேலோட்டமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் அகதிகள் ...

Read More »

படைப்பாளிகளின் நலன் கருதியே இந்த முடிவு – சூர்யா அறிக்கை

 சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு ...

Read More »

பௌத்த பல்கலைக்கழகங்கள் கல்வி அமைச்சின் கீழ்…………

மகாசங்கத்தினரின் வேண்டுகோளின்பேரில் இலங்கை பௌத்த, பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு, சர்வதேசம் ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் இது வரை எங்களுக்கு ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். ...

Read More »

தமிழர் தேசமும் ஒன்றுபட்டே நிற்கின்றது – கஜேந்திரகுமார்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தங்களது கட்சிக்கு நாட்டு மக்களின் ஆணை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது என்பது சரியாக இருந்தாலும், இந்த ஆணை வடக்கு – கிழக்கிலிருந்தும் கிடைத்திருக்கிறது என்று சேர்த்துக் கூறுவது சரியானதல்ல. இவ்வாறு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபாய இராஜபக்ச ஆற்றிய உரைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதிலுரையில் குறிப்பிட்டார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை ...

Read More »

யாழில் வாள்வெட்டு; ஒருவர் கைது

யாழ். கொழும்புத்துறை பகுதியில் நேற்று (20) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்புத்துறை பகுதியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ...

Read More »

ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்

வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், (வயது 38) உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், ...

Read More »

தொடர்ந்து எக்மோ கருவி மூலம் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எக்மோ கருவி மூலம் சிகிச்சை ...

Read More »