தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து உடனடியாக வி.மணிவண்ணன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இனிமேல் மணிவண்ணன் இயக்கத்தின் பெயரை பாவிக்க முடியாது என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று அறிவித்துள்ளார். தமிழ் காங்கிரசின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் இதனை அவர் தெரிவித்தார். இப்பிரச்சினை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது; ;மணிவண்ணன் கட்சிக் கொள்கைக்கு முரணாகவும், கட்சி தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாகவும் அவர் தன்னுடைய தேசிய அமைப்பாளர் பதவியையும், பேச்சாளர் பதவியையும பயன்படுத்தினார் என மத்தியகுழு தீர்மானத்திற்கு வந்ததன் பின்னர், அவருக்கு எழுத்துமூலமாக ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றால் நேற்று 59 பேர் மாண்டனர்; புதிதாக 81 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அளவில் இரண்டாவது பெரிய மாநிலம் விக்டோரியா. மாநிலத் தலைநகர் மெல்பர்னில் ஆறு வார முடக்கம் நடப்பில் உள்ளது. அடுத்த வாரம் அது முடிவுறும். ஆனால் கிருமித்தொற்று உறுதியாவோரின் அன்றாட எண்ணிக்கை அதிகரித்தால், கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அதிகாரிகள் கருத்துரைத்தனர்.
Read More »ஐ.தே.க இறந்துவிட்டதா?
ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா? நாம் இவ்வாறு கேட்கும்போது இவ்வளவு தெளிவாகத் தெரியும் ஒரு விடயத்தைச் சந்தேகிக்க வேண்டுமா என, மற்றவர்கள் கேட்கலாம். ஆனால், ஐ.தே.கவில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவும் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அவர்கள் இம்முறை சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற ...
Read More »இலங்கை கடற்பரப்பிலிருந்து தூரம் சென்றது ‘நிவ் டொமெயின்ட்’ கப்பல்
இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு அருகில் தீப்பரவியிருந்த எரிபொருள் ஏற்றிச் செல்லும் New Diamond கப்பலை, இந்திய கடற்படையினர், இலங்கை கடற்பரப்பிலிருந்து 35 தூரத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, தீரப்ரவல் ஏற்பட்டுள்ள கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்ட்டிருந்த எரிபொருள் சிறிதும் கசியவில்லை என்றும், இந்திய கடற்கரை பாதுகாப்பு அதிகார சபை உறுதிபடுத்தியுள்ளது. அத்தோடு, கப்பலுக்குள் ஏற்பட்டிருந்த தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதெனவும் இந்தி கடற்கரை பாதுகாப்பு பிரிவின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More »20 ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப் பொறி
19 ஆவது திருத்தத்தின் மீது கைவைத்துள்ளமை ஜனநாயகத்தின் மரண பொறியாகவே அமைகிறது. தனிநபருக்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமாக 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்தது. நிறைவேற்று அதிகாரம் முழுமையாக இல்லாது ஒழிக்கப்பட்டால் இங்கு பிரச்னை ஏற்படாது. ஆனால், 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியை போன்று தனி நபருக்கு அதி கூடிய அதிகாரம் எனும் போது அதற்கு மக்கள் ஆணை கிடையாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் ...
Read More »விடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்!-மலேஷிய பிரதமர்
தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெளிவுபடுத்தினார். அதேசமயம் பிற நாடுகளைப் போல் மலேசியாவும் எந்தவொரு குழுவையும் தீவிரவாதிகள் என்று சுலபமாக முத்திரை ...
Read More »பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை
விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் ...
Read More »எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலகநாடுகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!
கொழும்பில் துறைமுகநகரை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிசிசிசி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணுவது குறித்து நாடுகள் அவதானமாகயிருக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- ஆகஸ்ட் 26ம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தென்சீனா கடற்பரப்பில் கட்டுமானப்பணிகள் மற்றும் இராணுவமயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகளுக்கு எதிராகவும், கடலோர வளங்களை பயன்படுத்துவதற்கான உரிமையை கோரிய தென்கிழக்காசிய நாடுகளுக்கு எதிராக பலவந்தத்தை பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவும் விசா தடையை விதித்துள்ளது. இந்த தனிநபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் . அவர்களினது ...
Read More »ஈழத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !
மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் வருகிற ...
Read More »இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது. இதன்படி ...
Read More »