அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு மாகாணங்கள் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால், இரு மாகாணங்களுக்கு இடையேயான கடுமையான சட்டங்களால் தற்போது ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மார்க் கீன்ஸ் என்ற லொறி சாரதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிலை 4 மூளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று ...
Read More »குமரன்
உலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்
உலகத் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும், அதன் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு அந்தந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துத் தீர்வு காணவும் ஏதுவாக 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்களை அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களுக்கும் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டு, ஒன்றாக ஒருங்கிணைக்கும் பணியை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ...
Read More »கடல் வழியாக இலங்கை வந்த இருவர் மன்னாரில் வைத்துக் கைது
சட்டவிரோதமான முறையில் நேற்று அதிகாலை, இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கமாக வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மன்னார் – பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்படஉள்ளனர். இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு, அதன்முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவலைத் தரமுன் தொடர்பை துண்டித்த நிலந்த
கடந்த 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவிடமிருந்து தான் தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றதாகவும் அது சர்வதேச தீவிரவாதிகளின் ஒருங்கிணைந்த உடனடி பயங்கரவாத தாக்குதல் குறித்த நம்பகமான தகவல் பற்றியதாகும். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வழங்காது உரையாடலின் நடுவே தொலைபேசித் தொடர்பை துண்டித்ததாகவும் தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் தலைவர் (சின்ஐ) சிசிர மெண்டிஸ் கடந்த செப்டெம்பர் 15இல் இடம்பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ...
Read More »இன்றைய பார்வையில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை
இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெருமளவு மாற்றங்களை செய்வதற்கு அல்லது முற்றுமுழுதாக நீக்குவதற்கு ராஜபக்சாக்களின் ...
Read More »50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது ஐம்பதாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார். 90-களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார். 2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது ...
Read More »இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது பந்து தலையில் ...
Read More »நடிகை மீனா 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக ….
நடிகை மீனா 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. ...
Read More »புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி!
லிபியா (Libya) அருகே மத்திய தரைக்கடல் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலிகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் லிபிய கடல் படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசு பொலிஸாரின் ஊடாகச் செயற்படுத்தும் ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகள் குறித்து நேற்று பிற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் ...
Read More »