தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார். தற்போது அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது வரை ...
Read More »குமரன்
சீன வர்த்தக ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?
இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலைக்குள் சுழியோட வேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது – அ.நிக்ஸன் சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு ...
Read More »ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக்கிரியைகள் இன்று
திடீர் சுகயீனம் காரணமாக மரணமான ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. அவரது சொந்த ஊரான கண்டி – கந்தகட்டி பகுதியில் இன்று பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்ச் சாலையில், மக்கள் அஞ்சலிக்காக நேற்றிரவு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன. ‘தினக்குரல்’ பத்திரிகையூடாக தனது ஊடகப் ...
Read More »பைடன் பலவீனமான அதிபராகவே இருப்பார்
ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் கூறி உள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறார். அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் எப்படி ...
Read More »ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி
ஆஸ்திரேலியாவில் கேபிள் கடற்கரையில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிம்பர்லி பிராந்தியத்தில் கேபிள் என்ற புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் அனைவரும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். அப்போது ஒருவர் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது சுறா மீன் ஒன்று அவரை கடுமையாக தாக்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு சுறாவிடம் ...
Read More »சூர்யா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டா போட்டி?
சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் சூர்யா கதாபாத்திரத்தில் ...
Read More »பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு ...
Read More »தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, ...
Read More »காணி அதிகாரத்தை வழங்காத அரசு காணித் துண்டுகளை வழங்கப் போகிறதா?
சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று. இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ...
Read More »மாவீரர்களின்தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம்
கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது உரையின் போது சிங்கள எம்.பி.க்கள் பலர் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு; “தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து ...
Read More »