ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளது. அவை ‘கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக’ என்று பைபிளில் உள்ள வாசகத்தை கூறுகிறது. ‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ‘ரோபோ’ ஜெர்மனியின் விட்டன் பெர்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் மார்டின் லூதர் பிராட்டஸ் டன்ட் சீர்திருத்தங்களை பரப்ப 95 ஆராய்ச்சி ...
Read More »குமரன்
சிட்னியில் விவிட் என்ற ஒளியோவிய நிகழ்வுகள்!
அவுஸ்ரேலியா சிட்னியில் விவிட் என்ற ஒளியோவிய நிகழ்வுகள்.
Read More »ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அச்சுறுத்தி வரும் ஜூடி
ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை காலி செய்ய புதிய மால்வேர் வேகமாக பரவி வருகிறது. ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜூடி என அழைக்கப்படும் புதிய மால்வேர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3.65 கோடி ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்துள்ளதாக செக் பாயிண்ட் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூடி மால்வேர் கூகுள் பிளேவில் அதிகம் பரபரப்பட்ட ஒன்றாகியுள்ளது. ஜூடி மால்வேர் ஆட்டோ-கிளிக்கிங் வகையை சேர்ந்த ஆட்வேர் ஆகும். இது ...
Read More »சசிகுமார் படத்தில் மூன்று ஹீரோயின்கள்!
சசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த மூன்று கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ‘சாட்டை’ பட நாயகி மஹிமா ஒரு நாயகியாகவும், ‘முனியாண்டி விலங்கியல் நான்காம் ஆண்டு’ பட நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாகவும், ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா மற்றொரு நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சசிகுமார் தனது ...
Read More »ஆப்கானுக்கு 30 மேலதிக துருப்புக்களை அனுப்பவுள்ள அவுஸ்ரேலியா!
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, மேலதிகமாக 30 துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. குறித்த துருப்புக்கள் அனுப்பிவைக்கப்பட்டால், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த அவுஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) உறுதி செய்துள்ளார். தலிபான் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்துவதற்காக, குறைந்த பட்சம் 3,000 துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அவுஸ்ரேலியா தீர்மானித்துள்ளது. குறித்த துருப்புக்கள் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுச் செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், இன்றுக் காலை 10.30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னதாகவுள்ள யு9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு ...
Read More »சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா நிதி உதவி!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை சிறீலங்காவுக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. சிறீலங்கா அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறீலங்காவின் நிவாரண பணிகளுக்காக, ...
Read More »மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது
சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது. இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்திகதி) சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. மழைக் காரணமாக ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ஆரோன் பிஞ்ச் ...
Read More »மர்மங்கள் நிறைந்த சுவாதி கொலை வழக்கு படமானது!
எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு படமானது. ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்தற்கு `சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் படமாக இயக்கி இருக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த `உளவுத்துறை’, அருண் விஜய் நடித்த `ஜனனம்’ மற்றும் `வஜ்ரம்’ படங்களை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். ...
Read More »காஸ்மோ
ஹெல்மெட்டில் ஒட்டவைத்துக் கொள்ளும் வகையிலான ஒளிரும் கருவி. செயலி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. விபத்துகளில் சிக்கினால் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கும். பல ஹெல்மெட்களிலும் பயன்படுத்தலாம்.
Read More »