சசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அந்த மூன்று கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ‘சாட்டை’ பட நாயகி மஹிமா ஒரு நாயகியாகவும், ‘முனியாண்டி விலங்கியல் நான்காம் ஆண்டு’ பட நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாகவும், ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா மற்றொரு நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை சசிகுமார் தனது ‘சசிகுமார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் 10-வது படமாக தயாரிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal