வடமாகாணத்திற்கு மாகாணத்தின் புவியியல் வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஆளுநராக நியமிக்கப்படுபவர் தமிழ் மக்களின் வாழ்வியலை பூரணமாக புரிந்து கொண்டவரும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் போதிய அனுபவம் உள்ளவராகவும் உள்ள வடமாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும். வடமாகாணத்திற்கு ஒரு ஆளுனரை நியமிக்காமல் விடுவது சிங்கள தேசத்தை சேர்ந்த ...
Read More »குமரன்
உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் ‘குயின்’ இணையதள தொடரா?
உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை தொடரை சித்தரிக்கும் ‘குயின்’ இணையதள தொடர் வெளியிடுவது வாக்காளரை திசைத்திருப்பும் என் அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 27,30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார். அவரது பொதுநல வழக்கு கோரிக்கை மனுவில், “ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் ...
Read More »நாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்!
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஹொங்கொங்கில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக ஆதரவுச் சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஹொங்கொங் நெருக்கடியில் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவருகின்ற அணுகுமுறைக்கான அதிர்ச்சிதரும் வகையிலான ஒரு கண்டனமாக அமைந்தது ; மொத்தம் 18 மாவட்ட சபைகளில் 17 சபைகள் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அந்த தேர்தலில் முன்னென்றுமில்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் ( 71 சதவீதத்துக்கும் அதிகம் ) கலந்தகொண்டனர். ...
Read More »2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது!
வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே ...
Read More »மிட்செல் ஸ்டார்க் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது!
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ...
Read More »உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம்!
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்துவரும் 16 வயது செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு முன்னாள் அமெரிக்க முதல்பெண்மணி மிச்செல் ஒபாமா தனிப்பட்ட செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெட்டா தன்பேர்க்கினை கேலி செய்துள்ள நிலையிலேயே மிச்செல் ஒபாமா இந்த செய்தியை அனுப்பிவைத்துள்ளார். உங்கள் ஒளியைவேறு எவரும் மங்கலாக்குவதற்கு அனுமதிக்கவேண்டாம் என அவர் கிரெட்டா தன்பேர்க்கிற்கு தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கான விஜயத்தின் பின்னர் இந்த செய்தியை பதிவு செய்துள்ள அவர் வியட்நாமில் நான் சந்தித்த யுவதிகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்,என குறிப்பிட்டுள்ள ...
Read More »அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கை!
இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவா விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணையை மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பாக கருத்து வெ ...
Read More »யாழ். விமான நிலையத்திற்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பயணிகளுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக ...
Read More »ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா பதிலடி!
காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டடிருந்தது. இதனைத் தொடர்ந்து ...
Read More »மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் பட்டியல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் மணிரத்னம். இதற்காக இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை முதன்முறையாகப் படக்குழு அறிவித்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தை லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் ...
Read More »