போருக்குப் பிந்திய காலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்குள் ஆட்பட்டதுடன் அவர்களுக்கெதிரான வன்முறைகளானது தற்போதுவரை பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அத்தகைய வன்முறைகளை முற்றாக ஒழிக்க சமூக ஒத்துழைப்புடன் தனிநபர் ஒத்துழைப்பு என்பன மிகவும் அவசியமானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் விவகாரக் குழுத் தலைவியுமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆவது நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இது ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவின் இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டில் பல மாநிலங்களில் அஞ்சலி செலுத்திய நிலையில், கடல் கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடத்திவருகின்றனர். தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம் சார்பில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தூதரக அதிகாரி வன்லால் வானா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அனகன் பாபு, கர்ணன் சிதம்பரபாரதி, நாராயணன் மற்றும் சிட்னி வாழ் தமிழர்களுடன் பிற மாநிலங்களை ...
Read More »அதிநவீன ரோபோ செயற்கை கை
அதிநவீன ‘ரோபோ டிக்’ செயற்கை கையை ஜெர்மனி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட சிலருக்கு கை செயல் இழந்து விடுகிறது. அவர்களுக்கு தோள்பட்டை வரை செயல்பாடு இருக்கும். அதற்கு கீழ் கை செயல்பாடு இழந்த நிலையில் இருக்கும். அவர்களுக்கு ‘ரோபோ டிக்‘ கை தயாரிக்கப்பட்டுள்ளது. செயலிழந்த கையில் கையுறை போன்ற எலக்ட்ரானிக் எந்திரம் பொருத்தப்படுகிறது. அது ‘ ரோபோ’ பணிகளை செய்து பாதிக்கப்பட்டவரின் கைகளில் நரம்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதன் மூலம் மூளை ...
Read More »ஜெயலலிதா மரணம்! – மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன்?- கெளதமி
ஜெயலலிதாவின் மரணம் குறித்து மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன் என்று நடிகை கெளதமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ...
Read More »அவுஸ்ரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக அவுஸ்ரேலியா நியமித்துள்ளது. இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்ரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்திகதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இரண்டிற்கும் வெவ்வேறு அணி என்பதால் அவுஸ்ரேலியா ...
Read More »நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு பேட்டிகளிலும் அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்அவுஸ்ரேலியா களம் இறங்கியது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கியது. டாஸ் வென்ற ...
Read More »மட்டக்களப்பில் எழுக தமிழ் – ஜனவரி 21
கிழக்கு மாகாணத்து மக்கள் தமது பிரச்சனைகளை ஒரே இடத்தில் முன்வைக்கும்பொருட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் ‘எழுக தமிழ் பேரணி’ நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீட்கும் நோக்குடன் ஆக்கிரமிப்புப் படைகளை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறக்கோரியும் குறித்த பேரணி நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களைக் ...
Read More »சிட்னியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களுக்கு 20 ஆண்டு சிறை
சிட்னியில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சதித்திட்டமிட்ட இருவருக்கு, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஷியா புனிதத்தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த அந்த இரண்டு பேரும் திட்டமிட்டிருந்தனர். எனினும், அதற்கு மாறாக ஆயுதத் தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது. அவர்களின் சதித்திட்டம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுக் குழுவுக்குத் துப்பு கிடைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. கைதுநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்திருந்ததாக ...
Read More »ஜெயலலிதா மறைவு! அவுஸ்ரேலிய தமிழர்கள் இரங்கல்
கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அதன் வகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய கல்சுரல் சென்டரில் ஜெயலலிதா மறைவுக்கு 07 ஆம் திகதி மாலை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்து பலரும் பேசினார்கள். ஜெயலலிதாவின் இழப்பு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு பேரிழப்பு என்று நிகழ்ச்சி ...
Read More »ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம்
அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. எதிரி நாடுகளின் நிலைகளை உளவு பார்க்கவும், தீவிரவாதிகளை குண்டு வீசி அழிக்கவும் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லாமல் தானாக இயங்கும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து நீண்ட தூரங்களுக்கு பீட்சா மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய அவை உபயோகப்படுத்தப்பட்டன. தற்போது மனிதர்களின் உயிர்காக்கும் ரத்தத்தை சுமந்து சென்று பத்திரமாக சேர்க்கும் பணியை ஆளில்லா விமானங்கள் செய்து வருகின்றன. போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத மிகவும் ...
Read More »