குமரன்

சீனாவில் வெளியாகும் சமந்தா படம்!

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார். ஒரு நாள் போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும் மந்திர சக்தி மூலம் ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் மிதந்து வந்த கடிதம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜியா எலியட் என்கிற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய அப்பா பால் உடன் மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்து வந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு குறிப்புடன் கூடிய கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவனால் 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. மேற்கில் ஃப்ரீமாண்டில் இருந்து கிழக்கில் மெல்போர்ன் வரை தெற்கு அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்த 13 வயது சிறுவனின் ...

Read More »

நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடித்த பிரிட்டன் -சாதனை என்ன?

நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அடுத்தப்படியாக அந்நாட்டிடம், கின்னஸ் சாதனையில் தோற்றுள்ளது. உலகிலேயே மிக செங்குத்தான சாலையாக நியூசிலாந்து நாட்டின் டியூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. கின்னஸ் சான்றிதழின்படி, அந்த சாலை 35% அளவிற்கு செங்குத்தாகவும், இரு புறங்களிலும் வீடுகளும் இருந்தது. இந்த சாதனைக்குப் பின்னர் எவ்வித சாலையும் இடம் பெறவில்லை. ...

Read More »

குல்பூஷனை விடுதலை செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை!

குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தீர்ப்பை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன், இந்தியா சார்பில் குல்பூஷன் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம், உறவினர்களை  பார்க்கலாம் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இந்நிலையில், தீர்ப்பு ...

Read More »

கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?

திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே இதனை  நிர்வகித்தும் வந்தது. இருப்பினும், 2015ஆம் ஆண்டு ...

Read More »

5Gக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் இன்று (18), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்கு எதிரில் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், SMART LAMP POLE  என்ற பெயரில் 5ஜீ தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கோஷங்களை எழுப்பினர். அத்தோடு ‘அறிவியல் எனக்கூறி ஆபத்தை விதைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், யாழ். முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்மைச் சந்திக்க வேண்டுமென்றும் ...

Read More »

புகைப்படம் வெளியிட்டு அசத்திய பிரியங்கா!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்தின் போது அணிந்து இருந்த இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பெண்களுக்கான உடை என்றால் முதலில் சொல்வது சேலைதான். எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையாகும். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் கடந்த சில தினங்களாக “சாரி டுவிட்டர்” என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என ...

Read More »

சிரஞ்ஜீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய், சிரஞ்ஜீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் அவர் தமிழில் பொன்னியின் செல்வனைத் தழுவி மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் சிரஞ்ஜீவிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் ...

Read More »

ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் ...

Read More »

ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய உத்தரவு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங்கை, 100 மணி நேரம் சமூக சேவை செய்ய  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பலாத்காரத்துக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் ...

Read More »