நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அடுத்தப்படியாக அந்நாட்டிடம், கின்னஸ் சாதனையில் தோற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது நியூசிலாந்தின் இந்த சாதனையை பிரிட்டன் நாட்டு சாலை முறியடித்துள்ளது. அந்நாட்டின் வேல்ஸ் மாநிலத்தின் ஹார்லெச் நகரத்தில் உள்ளது போர்ட் பென் லெச் சாலை.
இந்த சாலை 37.5% செங்குத்தாக இருப்பதை கடந்த 6ம் தேதி உலக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கான சான்றிதழை அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகளுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இதனால் நியூசிலாந்து, இரண்டாவது முறையாக இங்கிலாந்திடம் தோற்றதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த சாதனையை ஹார்லெச் பகுதி மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal